தமிழகத்தின் கரும்பு விவசாயிகளை மோடி காப்பாற்றி யுள்ளார்

தமிழகத்தின் கரும்பு விவசாயிகளை மோடி காப்பாற்றி யுள்ளார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

‘கடந்த ஆகஸ்ட் 1, 2018 அன்று தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள், பிரதமர் மோடியை சந்தித்தனர். சந்திப்பின்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறினர். கடும்வறட்சியின் காரணமாக சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும், இதனால் ஆலைகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர். நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளை மூடினால், தமிழகத்தில் கரும்புவிவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவர் என்பதை எடுத்துரைத்தனர்.

தமிழக பிரதிநிதிகளின் இந்த கவலைகளை பிரதமர் புரிந்துக்கொண்டதை அடுத்து அவரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகார பூர்வமான அறிவிப்பு ஒன்றை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் எப்படிப்பட்ட இயற்கைப்பேரழிவு ஏற்பட்டாலும் நாடு முழுவதும் சர்க்கரைத் தொழில் துறையின் கடன்களை மறுசீரமைக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 10%-க்கும் மேலான பங்களிப்பை தமிழ்நாடு வழங்கும் நிலையில், 41 தமிழக சர்க்கரை ஆலைகளின் நிதி சார்ந்த சுமைகளை குறைக்கும் வகையில் பெரிய நிவாரணமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த உடனடி நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் நல்லாட்சி மற்றும் செயல் திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நன்மையைக் கருதி சர்க்கரைத்தொழில் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி துரிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது கரும்பு விவசாயிகளுக்கு தற்போது மிகுந்தமகிழ்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு தமிழர்கள் சார்பாக நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு பெரும் துணைநின்ற மத்திய அமைச்சர்.நிர்மலா நீதாராமனுக்கு எனது மனமார்ந்த நன்றி’.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...