பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு மாற்றம் – அண்ணாமலை எதிர்ப்பு

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் தொடர்பான முன்னோட்ட வீடியோவில், முதல்வர் ஸ்டாலின், நாடு முழுதும் பயன்படுத்தப்படும் ரூபாய்க்கான குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ ‘ என குறிப்பிட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

ரூபாய் என்பதை குறிப்பிட நாடு முழுவதும் தேவநாகிரி எழுத்துரு, கடந்த 2010ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசும், இந்த குறியீட்டை பயன்படுத்தி வந்தது.

தமிழக அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் 2025- 2026ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் லச்சினயை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். அதில், ரூபாய்க்கான அடையாளக் குறியீட்டிற்கு பதில், தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதை முதன்மைப்படுத்தி லச்சினை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், இந்திய அரசின் 14 அலுவல் மொழிகளில் ஒன்றை தான் முதல்வர் பயன்படுத்தி உள்ளார். இது தாய்மொழி மீதான பற்றை வெளிப்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரானது இல்லை எனக்கூறப்பட்டு இருந்தது. இந்த மாற்றம் நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025 -26 ம் ஆண்டுக்கான தி.மு.க., அரசின் பட்ஜெட்டில், தமிழரால் வடிவமைக்கப்பட்ட ரூபாய் குறியீடு மாற்றப்பட்டு உள்ளது. இந்த குறியீடு, பாரதம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நமது நாணயத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் ஆவார். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய – மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில், அடுத்ததாக இந்த விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கிய உதயகுமார், தந்தையும் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான தர்மலிங்கம், தாயார் ஜெயலட்சுமி, மூத்த சகோதரர் ராஜ்குமார், இளையசகோதரர் விஜயகுமார் ஆகியோருடன் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியை கடந்த 2010 ஜூலை 24 அன்று சந்தித்தார்.

இந்த புகைப்படத்தை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.

அத்துடன் பதிவில் கூறியுள்ளதாவது: ரூபாய்க்கான குறியீடு தேவநாகிரி முறையில் இருப்பதால் தான் அதனை நீக்கி உள்ளதாக, தமிழக மாநில திட்டக்குழு நிர்வாக துணைத்தலைவர் கூறியுள்ளார். இவரை போன்ற நபர்கள் முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்திருக்கின்றனர்.

திறமையற்றதை மறைக்க வெற்று விளம்பரங்களுடன், அர்த்தமற்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தந்தை அங்கீகரித்ததை மகன் புறக்கணிக்கிறார். இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...