ராகுல் தலைவரா?, உளவாளியா?

ரபேல் விமானத்தின் விலை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளதை காட்டிலும் கூடுதலாக மோடி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது எனக்கூறிவந்த ராகுல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விமானத்தின் விலைக்கு மட்டும் ஒப்பந்தம் போடப்பட்டது என்பதும் மோடி ஆட்சியில் ரபேலில் பயன்படுத்தும் ஏவுகனைகள் உள்பட ஆயுதங்களுக்கும் சேர்த்து ஒப்பந்தம் போடப்பட்டதால் விலை அதிகமாக இருக்கிறது என்ற விளக்கத்தை ஏற்காமல் அதில் என்னென்ன ஆயுதங்கள் இருக்கும் என , கேள்விகேட்டு நம் ராணுவ ரகசியத்தை எப்படியாவது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு பெற்றத்தர போராடிப்பார்த்தார்.

[ராகுல் காங்கிரஸ் தலைவரா, இல்லை பாக் உளவுத்துறைத் தலைவரா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டால் வியப்பேதும் இல்லை.]

இப்போது அரசு நிறுவனமான HAL இருக்கும்போது தனியார் நிறுவனமான ரிலையன்ஸுடன் எதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது, ஒருலட்சம் கோடி ரூபாய் ஊழல் என கேனத்தனமான குற்றச்சாட்டைக் கூறி வழக்கம் போல ரபேல் ஒப்பந்தத்தை எப்படியாவது தடுத்து பாகிஸ்தானுக்கு உதவி செய்யத் துடிக்கிறார் ராகுல்.

HAL நிறுவனம் தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தவும், காவேரி இன்ஜினின் தரத்தை மேம்படுத்தவும் முனைப்பு காட்டி வருகிறது. அதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்க பிரான்சின் இதே தாட்சர் நிறுவனத்துடன் தான் HAL ஒப்பந்தம் போட்டுள்ளது.

நம் நாட்டில் விமானம் தயாரிக்க, ஒருநிறுவனம் மட்டுமே இருக்க வேண்டுமா ? மேலும் ஒரு நிறுவனம் விமானத் தயாரிப்பு துறையில் நுழையக்கூடாதா? இரு நிறுவனங்கள் இரு வேறுபட்ட ரக போர் விமானங்களைத் தயாரிப்பதால் இரு நிறுவனங்களுக்கும் இடையே ஆக்கப் பூர்வமான போட்டி நிலவவும், அது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் வழிவகுத்தால் நாட்டிற்கு நல்லதுதானே.


அமெரிக்காவில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் இருக்கின்றன.
ஒரே நிறுவனத்தை மட்டும் நம்பியிருந்தால் அவர்களும் நம்மைவிட்டால் வேறு வழியில்லை என்ற எண்ணத்தில் சுணக்கமாகத்தானே இருந்திருக்கின்றனர். 50 ஆண்டுகால முயற்சியில் HAL ஆல் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடிய வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

130, 000 கோடி ஊழல் என்கிறாரே ராகுல். அது எப்படி ?

மொத்த ஒப்பந்தம் 58000 கோடி. ஒப்பந்தப்படி பாதித்தொகையை இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்பது ரபேல் நிறுவனத்துக்கு இந்தியா வைத்த நிபந்தனை. அதன்படி தான் ரிலையன்ஸுடன் இணைந்து 30 000 கோடி ரூபாய் விமான தயாரிப்பில் முதலீடு செய்கிறது.


ரிலையன்ஸின் பங்கு 51%.
ரபேல் நிறுவனப் பங்கு 49%
அடுத்த பத்து ஆண்டுகளில் 100000கோடி ரூபாய் வருமாணம் கிடைக்கும் என எதிர் பார்ப்பதாக ரிலையன்ஸ் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டது.நிறுவனப் பங்குகளை வாங்குபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக நிறுவனங்கள் இவ்வாறு அறிவிப்பது சாதாரணமானது. லாபம் 100000கோடி+முதலீடு 30000கோடி .ஆக மொத்தம் 130000கோடி ஊழல் என்கிறார் ராகுல்.

ராகுலின் கணக்குப்படி பார்த்தால், முத்ரா திட்டத்தில் ஒருவர் பத்து லட்சம் கடன்வாங்கி தொழில் செய்து பத்து வருடத்தில் ஐம்பது லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டால் மோடி தனி நபருக்கு கடன் வழங்கி 60 லட்சம் ஊழல் செய்துவிட்டார் என்பார் ராகுல். இதுதான் ராகுலின் ஊழல் கணக்கு.

15 நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட ரிலையன்சிற்கு ஒப்பந்தம் கிடைக்க மோடிதான் காரணம் என்கிறார் ராகுல்.
இதே அமெரிக்காவாக இருந்தால் 15 நாளில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு நம்பிக்கை அளித்து புதிய முயற்சியில் ஈடுபட வைத்த அதிபரை ஊடகங்களும் மக்களும் பாராட்டுவார்கள். இங்கு தூற்றுகிறார்கள்.


ஆனால் 1990 முதல் இயங்கிவரும், சிறு விமானங்கள், ஹெலிகாப்டர் தயாரித்து அனுபவம் பெற்ற skil என்ற நிறுவனத்தை வாங்கித்தான் அதன் பெயரை ரிலையன்ஸ் டிபன்ஸ் என பெயரிட்டுள்ளதே தவிர அது புதியதோ, அனுபவமில்லாததோ அல்ல.

வாகனத் தொழில்நுட்பம் கூட இல்லாத காலக்கட்டத்தில் இந்திய அரசின் மாருதி நிறுவனமும், ஜப்பானின் சுஜுகி நிறுவனமும் இணைந்து மாருதி கார்களை உற்பத்தி செய்தது இந்தியாவில் வாகனப் புரட்சிக்கு வழிவகுத்தது.
அதே சுஜுகி நிறுவனம் TVS தனியார் நிறுவனத்துடன் இணைந்து இரு சக்கர வாகனங்களையும் தயாரித்தது.
டாடா, பஜாஜ், மகேந்திரா போன்ற நிறுவனங்களும் வேறு பல ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைந்து வாகன உற்பத்தியில் ஈடுபட்டன. அரசின் ஒத்தழைப்புடன் தானே இதோல்லாம் சாத்தியமானது.

அரசு நிறுவனமான மாருதி இருக்கும்போது தனியார் நிறுவனங்கள் வாகன உற்பத்தியில் ஈடுபடக்கூடாது எனக் கூறியிருந்தால் இன்று இவ்வளவு பெரிய வாகனப் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டிருக்க முடியுமா ?

தனியார் நிறுவனம் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற இடதுசாரி மனோபாவத்துடனான கேள்வியை, தாராளமய, தனியார்மய, கொள்கைகளை இந்தியாவிற்கு அறிமுகப் படுத்திய அதே காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் பேசுவதுதான் முரன்பாடாக இருக்கிறது.

எப் 16 விமானத்தை டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்க அமெரிக்காவின் லாக்கிட் மார்டின் நிறுவனம் முன் வந்துள்ளது.அதானி குழுமமும் ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் ஈடுபட உள்ளது.
பல நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபடுவதன் முலம் அன்னிய செலாவணி மிச்சமாகும். உள்நாட்டு வேலை வாய்ப்பு பெருகும். அரசிற்கு வரி வருமானமும் கிடைக்கும்.

ஊழல் செய்வதற்குதான் ரிலையன்சுடன் ஒப்பந்தம் போடப்பட்டது என்பதிலும் அர்த்தம் இல்லை.
ஊழல் செய்வதற்கு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தனியார் நிறுவனங்கள் இல்லாமலேயே ஊழல் புரியலாம் என்பதற்கு காங்கிரஸின் போபர்ஸ் பீரங்கி கொள்முதல், அகஸ்டா வெஸ்டா ஹெலவிகாப்டர் கொள்முதல் என ஊழல்புரிந்த காங்கிரஸுக்கு தெரியாதா என்ன ?

பல்வேறு நாடுகளில் ராணுவ ஆராய்ச்சி துறையில் தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன ஆந்நிய முதலீட்டையும்கூட ராணுவ ஆராய்ச்சியில் அனுமதிப்பதில் தவறில்லை.
உலகில் எந்தவொரு நாடும், தமது நாட்டில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காமல் வைத்திருக்கும் ஒரேதுறை அரசியல் துறை மட்டும்தான்.

அந்த அரசியலில் கூட அந்நிய முதலீட்டை அனுமதித்ததுதான் இந்தியா செய்த மாபெரும் தவறு, அதன் விளைவுகளைத் தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்.இந்திய அரசியலில் நுழைந்த முதல் அந்நிய முதலீடு சோனியா.அதன் கிளை தான் ராகுல்.இந்த இரு அரசியல் அந்நிய முதலீடுகள் இருக்கும் வரை இந்தியாவை வளரவிட மாட்டார்கள். இந்த இரு அந்நிய முதலீடுகளை இந்திய அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் நாளே இந்தியாவிற்கு பொன்னாள்.

தேர்தல் நெருங்க நெருங்க,தனது அயல்நாட்டு எஜமானர்களின் ஆனைக்கிணங்க இதுபோன்ற புயல்களை ராகுல் கிளப்பவார்.ஆனால் ராகுல், நீங்கள் ஒருபோதும் வங்கப் புயலாக முடியாது. எங்க ஊர் வைகைப் புயல் போல் வேண்டுமானால் ஆகலாம்.

முனுசாமி ஆர்.வெள்ளோடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...