பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றவாளி என தீர்ப்புவழங்கிய சூரத் நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 லோக் சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்குபின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது’ என பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் மீது நடவடிக்கை எடுக்ககோரி குஜராத்மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பா.ஜ., – எம்.எல்.ஏ., புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ” பிரதமரை அவதூறாகபேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி. அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது ” என தீர்ப்பு வழங்கினார். மேலும், 10 ஆயிரம் பிணையில் அவருக்கு ஜாமின் வழங்கியதுடன், இந்தவழக்கை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனையை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |