ரஃபேல் சர்ச்சை! கதைகளின் கதை!

ரஃபேல் போர் விமான கொள்முதலில்    இந்திய சேவைகளுக்கான பங்குதாரராக    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்    மட்டுமே இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டது!    பிரான்ஸ் அரசுக்கு வேறு வாய்ப்பற்ற  ஒற்றைத் தேர்வுக்கு இது காரணமாக    இருந்தது என்று   பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி    ஹாலந்தே கூறியதாக செய்தி பரவி   பரபரப்பு உண்டானது!          இந்த பரபரப்பு செய்திக்கான விதையை    இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேடு    இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ம் தேதி விதைத்தது!     

2016 ம் ஆண்டு இந்தியா – பிரான்ஸ்    இரு நாடுகளுக்கும் இடையில் ரஃபேல்    கொள்முதல் ஒப்பந்தம் டெல்லியில்  கையெழுத்தானது!      அதே சமயத்தில் – ஜனவரி 24 – 2016 ல்    பிரான்ஸ் ஜனாதிபதியின் ( கூடி வாழும்)  தோழியின் திரைப்பட தயாரிப்புக்கு    ரிலையன்ஸ் நிறுவனம் நிதி உதவி    அளிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது !       2016 ம் ஆண்டின் இந்த ஒப்பந்தத்தை   2018 ஆகஸ்ட் மாதம் " கண்டுபிடித்து"    31 ம் தேதி செயதிக் கட்டுரை ஆக்கியது   இண்டியன் எக்ஸ்பிரஸ்!       இதன் தொடர்ச்சியாக    பிரான்ஸ் நாட்டில் உள்ள Mediapart என்ற    இணையதள செய்தி பத்திரிக்கை   இந்தியன் எக்ஸ்பிரஸ் விதைத்த விதையை    வளர்ந்து செடியாக்கியது!  

Mediapart வளர்த்த செடியை    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்    இந்திய ஊடகங்களும் மரமாக வளர்க்க   முயற்சி மேற்கொண்டானர்!      இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியை    அடிப்படையாகக் கொண்டு Mediapart    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை    தொடர்பு கொண்டு —    — ரஃபேல் ஒப்பந்தம் , இந்தியா- பிரான்ஸ்    இரு நாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகி    இருக்கும் நிலையில்    அந்த ஒப்பந்தத்திற்குத் தொடர்புடைய    ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து    உங்களுக்கு நெருக்கமானவரின்    திரைப்படத்திற்கு முதலீடு பெற்று இருப்பது    நீங்கள் வகித்த பதவியின் அதிகாரத்தின்    நெறி முறை கோட்பாடுகளுக்கும்   முரணானது என்ற பிரிவில் வராதா கேட்கிறது!     

 ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும்    பிரான்ஸ் அரசுக்கும் இடையில்    நேரடித் தொடர்பு இல்லை; அதனால்   ரிலையன்ஸ் நிறுவன முதலீட்டை    நான் வகித்த பதவியின் அதிகாரத்தையும்    ரஃபேல் ஒப்பந்தத்தையும் தொடர்பு படுத்தக்    கூடாது என்று தான் முன்னாள் ஜனாதிபதி    பதில் அளித்து இருக்க வேண்டும்!       காரணம்   ரஃபேல் ஒப்பந்த ஷரத்துக்களின்படி    டஸால்ட் நிறுவனம் தனது இந்திய    சேவைகளுக்கான நிறுவனத்தை   தன்னிச்சையாக தானே தேர்வு செய்து    கொள்ளலாம்!    அதில் இந்தியா- பிரான்ஸ் ஆகிய இரண்டு    நாடுகளின் அரசுகளுக்கும்   எந்த வித பங்கும் இல்லை!    இது தான் ஒப்பந்த ஷரத்து!   ( ஒப்பந்தத்தின் இந்த ஷரத்தின் நகல்   என்னிடம் இருக்கிறது).       

ஆனால்    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி    அப்படி சொல்லவில்லை!    ரஃபேல் ஒப்பந்த இந்திய நிறுவனமாக    இந்திய அரசு தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை    திணித்தது என்ற வகையில் கருத்து   தெரிவித்தார்!    இந்த கருத்து தான் சர்ச்சையை வளர்த்தது!       நேற்று முன் தினம் பரபரப்பை உண்டாக   காரணமாக இருந்த தனது கருத்தை    நேற்று மாலை நிராகரித்து விட்டார்    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி! .      ரஃபேல் ஒப்பந்த இந்திய நிறுவனமாக    எந்த நிறுவனம் இருக்க வேண்டும் என்று    முடிவு செய்யும் பொறுப்பு பிரான்ஸ் அரசுக்கு    இல்லை – ரிலையன்ஸ் நிறுவனம் தான்    இருக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதா   என்று டஸால்ட் நிறுவனத்தை தான்    கேட்கவேண்டும் என்று கூறி    பல்டி அடித்து விட்டார்!.

 இந்த சர்ச்சையை பிறந்து வளர்ந்த விதத்தை    கூர்ந்து கவனித்தால் ஒரு திரைக்கதை    இருப்பதை காணமுடியும்!  இந்திய எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு செய்தி    " உண்டாக்கப்படுகிறது "    இது உண்டாக பின்னணியில் இருந்தது   அரசியல் கட்சி அல்லது பிரமுகர் இருக்கலாம்!       இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்திக் கதையை    முன்னோக்கி கொண்டு செல்ல   Mediapart ஐ ஏற்பாடு செய்து இருக்கலாம்!       இந்திய அரசியல் நோக்கத்திற்காக    நடந்த இந்த நாடகம் தனக்கு எதிராக    திரும்புகிறது என்ற அச்சத்தால்    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி    உளறி இருக்கலாம்! .      அல்லது    இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி திணித்தது    இந்திய ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர் என்று    அவருக்கு தகவல் அளிக்கப் பட்டு இருக்கலாம்!.

 அந்த கோபத்தில் இந்திய அரசை    சங்கடத்தில் ஆழ்த்தும் நோக்கத்தில்    ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான்    கட்டாயப்படுத்தி திணித்தது என்று    கூறி இருக்கலாம்!.       இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி நோக்கம்   சுலபமாக புரிந்து கொள்ளக் கூடியது!    வரும் பாராளுமன்ற தேர்தலில்    மோடியை வீழ்த்த    காங்கிரஸ் கட்சி இரண்டு பிரச்சினைகளை    பிரதான பிரச்சாரம் ஆக்க விரும்புகிறது

1    ரஃபேல் போர் விமான கொள்முதலில்   மோடி ஊழல் செய்து விட்டார்!       

2 மோடி பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக    இருக்கிறார்!       இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே    இண்டியன் எக்ஸ்பிரஸ் + Mediapart செய்திகள்    தோன்றுகின்றன!       அதற்கு தலையை சுற்றி மூக்கை தொடுவது    போல பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின்    தோழிக்கும் ரிலையன்ஸ் முதலீட்டுக்கும்   உள்ள தொடர்பை பயன்பாடுத்தும் முயற்சி    நடந்து இருந்தால் ஆச்சரியம் இல்லை!       அனில் அம்பானியின் நிறுவனம்    திரைப்பட தயாரிப்பு தொழிலிலும்    ஈடுபட்டு வருகிறது என்பதால்    இந்த முதலீட்டு திட்டம் ஆச்சரியம் இல்லை!       ஆனால்   

இந்திய அரசுடன் பேசி ரஃபேல் ஒப்பந்தத்தை    வெற்றிகரமாக முடித்து கொடுத்ததற்காக    டஸால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் மூலம்    திரைப்பட தயாரிப்புக்கு உதவியதா?    லஞ்சத்தை முதலீட்டின் வடிவில் தந்ததா    என்பது நமக்குத் தெரியாது!       

அப்படி நடந்து இருந்தால் அதை வெளியில்    கொண்டு வரும் முயற்சி தொடர்ந்து    நடக்க வாய்ப்பு இருக்கிறது!      அது போல ஏதாவது தகவல் வெளியானால்    நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்    மோடி அரசு எதிரான கருத்து பரவ    வாய்ப்பு இருக்கிறது!. இந்த சர்ச்சையை ஊடகங்கள்    செய்தியாக தந்த விதம் அலாதியானது!    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி   கூறிய கருத்தை பிரான்ஸ் நாட்டின்    அறிவிப்பு என்று வர்ணித்தது!    அவரது கருத்தை நிராகரித்து பிரான்ஸ்    அரசு வெளியிட்ட அறிக்கையின்    வாசகர்களுக்கு இடையில் புதிய    விளக்க உரைகளை கண்டுபிடித்து    துப்பறிய முயன்றன!.      

 2004 – 2014 இடைப்பட்ட காலத்தில் நடந்த    ஒரு பிரச்சினை பற்றி மன்மோகன்சிங்    இப்போது கருத்து கூறினால்   அது முன்னாள் பிரதமரின் கருத்து என்று தான்    செய்தி வெளியாகும்!    இந்திய அரசின் கருத்து என்று வராது!   ஆனால்    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின்    கருத்தை பிரான்ஸ் அரசின் தகவலாகவே    ஊடகங்கள் கூறின!    இதில் அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை!    மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு    எதிராக வரும் செய்திகளை உற்சாகமாக    கொண்டாடும் மனநிலையில் இந்திய    ஊடகங்கள் இருக்கின்றன என்பதை தான்   காட்டுகிறது!.

ஊடக செய்தி மேலாண்மையில்    காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும்    உள்ள தேர்ச்சியும் திறமையும்,    பாரதிய ஜனதா கட்சிக்கும் ஆட்சிக்கும் இல்லை    என்பதை இந்த சர்ச்சை மீண்டும்    காட்டி இருக்கிறது! அவ்வளவு தான்!         2019 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்    பல மர்மக்கதைகள் அரங்கேறும்!       அவற்றை ஆளும் கட்சி எப்படி எதிர்கொள்ளப்    போகிறது என்பது இந்திய அரசியல்    சதுரங்கத்தின் காய் நகர்த்தலில்   தேர்ந்தவர் யார் என்பதை தீர்மானிக்கும்!.

நன்றி; வசந்த பெருமாள்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...