கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் வரை செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எண்ம(டிஜிட்டல்) பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆரம்பகட்டத்தில் இது குறித்து பல சர்ச்சைகள் கிளப்பப் பட்டன குறிப்பாக எதிர்க்கட்சிகள் மத்திய மோடி சர்க்கார் மக்களை வாட்டுகிறது என்று அரசியலும் செய்தனர்
ஆனால் இன்று, யுபிஐ பயன்பாடு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2016 முதல் இது வரையிலான காலகட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன்பணமதிப்பு ரூ. 10.62 லட்சம் கோடி ஆகும்.
தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம்(என்பிசிஐ) இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதத்தைவிட பரிவர்த்தனை எண்ணிக்கை 7.16 சதவிகிதமும் அதன் மதிப்பு 4.76 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதிவுக்கு பதில்அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘இது ஒருசிறப்பான சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பொருளாதாரத்தை ஒழுங்கு படுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு உறுதியை இதுகுறிக்கிறது. கரோனா தொற்று நோய்களின் போது எண்ம பணப் பரிவர்த்தனை குறிப்பாக உதவியாக இருந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |