தேசிய நினைவு சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கம்

நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய பதிவுகளைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு 2007-ம் ஆண்டில் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசிய இயக்கத்தை, நிறுவியுள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட தரவு http://nmma.nic.in.என்ற தளத்தில் இடம்பெற்றுள்ளது.

 

மாணவர்கள், கல்லூரிகள், ஆராய்ச்சியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நாட்டின் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் குறித்த இரண்டு தேசிய தரவுத்தளங்களை உருவாக்குவதே தேசிய  நினைவுச் சின்னங்கள், தொல்பொருட்கள் பாதுகாப்பு இயக்கத்தின்  நோக்கமாகும்.

 

நினைவுசின்னங்கள் மற்றும்  தொல்பொருட்களை ஆவணப்படுத்துவது குறித்த பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிலரங்குகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இது கர்நாடகாவின் பெங்களூருவில் தென் பிராந்தியத்திற்கான இதுபோன்ற ஒரு பயிலரங்கை நடத்தியது, இதில் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகம் மற்றும் மாநில தொல்பொருள் துறைகளிலிருந்து 65 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மூலம், அரசு வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடனும், ஆய்வகங்களுடனும் இணைந்து சமீபத்திய குறிப்பிட்ட ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் மறுசீரமைப்பு நடைமுறைகளுக்கான புதுமையான நுட்பங்களை அணுகுகிறது. ஏற்கனவே வெனிஸ்சில் உள்ள கா ஃபோஸ்கரி பல்கலைக்கழகம், இத்தாலியில் உள்ள ஐ.சி.ஆர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுள

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர� ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...