10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரும் “ஆயுஷ்மான் பாரத்”

பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்த ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் 1000 பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடுமுழுவதும் 10 கோடி ஏழை குடும்பங்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 23-ம்தேதி தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு புதியதிட்டம் ஒன்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பத்தை  சேர்ந்த 50 கோடி பேர் சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. இதற்கு ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டது.

மேலும், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா அபியான்’ என்ற பெயரிலும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 8.03 கோடி குடும்பங்களும், நகர்புறத்தைசேர்ந்த 2.33 கோடி குடும்பங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சமூக பொருளாதார சாதிகணக்கெடுப்பு அடிப்படையில் இந்த திட்டத்தில் 10.36  கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஏழுவகையான பிரிவு அடிப்படையில் தர நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர்.

நகர்புறங்களில் 11 வகையாக இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 வகையில் துப்புரவுதொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள், வீதியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,  கட்டுமான தொழிலாளர்கள், சித்தாள்கள், கல்தச்சர்கள், கூலித் தொழிலாளர்கள், தினக்கூலிகள், பெயின்டர்கள், காவலாளிகள், தலைசுமை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருகுடும்பத்தில் எத்தனை பேர்  இருந்தாலும் அத்தனை பேரும் அதில் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 1,354 வகையான மருத்துவ சிகிச்சை பெறலாம். இதில் 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்து விட்டன. தெலங்கானா, ஒடிசா, டெல்லி, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இதில்  இணைய வில்லை. இந்த திட்டத்தை கடந்த 23-ம் தேதி பிரதமர் மோடி அதிகாரப் பூர்வமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர் முதலாவதாக பயனடைந் துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

One response to “10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை தரும் “ஆயுஷ்மான் பாரத்””

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...