அமைச்சரவை முக்கிய முடிவு மோடி பகீரங்க அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை விரிவு படுத்துவது, நீர்மின் சக்தி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பது மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் நான்காம் கட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

புருனே, சிங்கப்பூர் பயணத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திரமோடி இந்தியா திரும்பிய நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பல முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவைஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாகஆயுஷ்மான் பாரத் மருத்துவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களுக்கு சுமார் 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதுதவிர பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நான்காம் கட்டமாக 25 ஆயிரம் கிராமங்களுக்கு சுமார் 62,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைப்பது, மின்சாரஆம்புலன்சுகளுக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, நீர்மின் திட்டங்களுக்கு சுமார் 12,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பாக ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,”ஆயுஷ் மான் பாரத் திட்டம்இந்தியாவின் மிக முக்கியமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைவிரிவு படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் பல்வேறுபகுதிகளில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்கள் அனைவருக்கும் 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சைவழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்படும் இலட்சக்கணக்கான குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் கூடுதலாக வருமானத்தைகருத்தில் கொள்ளாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக 5 லட்சம் வரையிலான சிகிச்சைக்கு கூடுதலாக டாப் அப் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பின் மூலமாக இந்தியா முழுவதும் வசிக்கும் சுமார் நான்கரை கோடிகுடும்பங்களில் உள்ள ஆறு கோடிக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள். மேலும் இந்ததிட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மூத்த குடிமக்களுக்கு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆயுஷ்மான் பாரத்யோஜனா, 50 கோடிக்கும் அதிகமான இந்தியக் குடிமக்களுக்கு, குறிப்பாகப்பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்குப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வரும் நிலையில் அதனை விரிவுபடுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...