இன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நாட்டுமக்களையே ஏமாற்றக்கூடும்.

லோகியாவின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, சோஷலிஸ கட்சிகள் மகாகூட்டணி அமைக்க முயன்று வருகின்றன’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அந்தக்கட்சிகள், சோஷலிஸ கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்த ராம்மனோகர் லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்றன. இதுதெரிந்திருந்தால், அவர் மிகவும் வருத்தப்பட்டிருப்பார் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமாஜவாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை குறிவைத்து பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராம் மனோகர் லோகியாவின் 109-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது வலைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

லோகியாவின் கருத்துகள் அனைத்தும் நம்மை ஊக்கப்படுத்துபவை. விவசாயத்தில் புதுமையை புகுத்துவது குறித்தும், விவசாயிகளின் பிரச்னைகளைப் போக்குவதுகுறித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவருடைய வழிகாட்டுதலில், பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கான வருமான ஆதரவுதிட்டம் (பிஎம்-கிசான்), நீர்ப்பாசனத் திட்டம், இணையவழி விவசாய சந்தைத் திட்டம் உள்ளிட்ட பலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

ஜாதிப் பாகுபாடுகளையும், பாலின சமத்துவ மின்மையையும் லோகியா தொடர்ந்து கண்டித்து வந்தார். அவரைப் பின்பற்றியே, முஸ்லிம் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முத்தலாக் மசோதாவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இயற்றியது. ஆனால், லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் கட்சிகள், முத்தலாக் மசோதாவை எதிர்த்தன. அந்தக்கட்சிகள் அனைத்தும் வாக்குவங்கி அரசியலைக் கடைப்பிடித்து வருகின்றன.

லோகியா உரையாற்றத் தொடங்கினால், காங்கிரஸ் கட்சி அச்சத்தின் உச்சத்துக்குச் சென்று விடும். காங்கிரஸ் ஆட்சியின் கீழ், விவசாயம், தொழில்துறை, பாதுகாப்புத் துறை என எந்தத்துறையும் வளர்ச்சி அடையவில்லை என்று லோகியா ஒரு முறை கூறியிருந்தார்.
அவர் அப்போது கூறியது, இந்தக் காலத்துக்கும் பொருத்தமாகவே இருக்கிறது. அதற்கு அடுத்து பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும், விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்புடை யவர்களின் நிறுவனங்களை  தவிர மற்றவை வளர்ச்சி அடையவில்லை; தேசப்பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

அத்தகைய காங்கிரஸ் கட்சியுடன் பிராந்தியகட்சிகள் கூட்டணி அமைத்துவருகின்றன. இது முரண்பாடானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். இன்று லோகியா உயிரோடு இருந்திருந்தால், அவர்மிகவும் வருத்தப்பட்டிருப்பார். லோகியாவைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சிகள், அவரின் சோஷலிஸ கொள்கைகளைக் கைவிட்டுவிட்டன. அக்கட்சிகள் லோகியாவை அவமதித்துள்ளன.

இந்தக்கட்சிகள் அனைத்தும் பதவிக்கு வரத்துடிப்பதையும், பதவிக்கு வந்தபின் நாட்டின் வளங்களைக் கொள்ளையடிப்பதையுமே கொள்கைகளாகக் கொண்டுள்ளன.

குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே இக்கட்சிகள் செயல்படும் என்பதால், அவர்களது ஆட்சியில், ஏழைமக்களுக்கும், பழங்குடியினருக்கும், தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பெண்களுக்கும் எந்தப்பாதுகாப்பும் இருக்காது.

இன்று லோகியாவை அவமதிப்பவர்கள், நாளை நாட்டுமக்களையே ஏமாற்றக்கூடும். எனவே, அவர்களுக்கு நாட்டை ஆளவாய்ப்பு அளிக்க வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...