காங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா?

காங்கிரஸிடம் இருந்து நம் நாட்டைக் காக்க… இப்போது ஒருசுதந்திரப் போர் தேவைப்படுகிறது! அதற்குக் காரணமாக அமைந்தது, அதன் வெளிநாட்டுத்தலைமை என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம். ஆனால், அதன் கொள்கைகளும் கருத்துகளும், எதிர்காலத் திட்டங்களும் இந்தநாட்டை துண்டு துண்டாக சிதறடிப்பது போல் அமைந்திருப்பதும், கொள்ளை அடிப்பதுமாக இருப்பது கண்கூடாகத் தெரிகிறது! அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த உண்மையை நாட்டுக்கு லேட்டாக எடுத்து சொல்லி யிருக்கிறது.

இந்ததேர்தல் அறிக்கைகளை நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை! என்ன சொல்லியிருக்கிறது என்று சொன்ன வர்களுக்கும் தெரியாது, கேட்டவர்களுக்கும் புரியாது! அறிக்கை வெளியான அன்றே குப்பைத்தொட்டிக்கு போய்விடும்!

ஆனால், இன்று காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை, என்னை மிகவும் பாதித்தது! அவர்கள் ஆட்சிக்குவந்தால், தேசத் துரோகம் செய்வது ஒரு குற்றமாக இருக்காது என்று வாக்குறுதியளித் திருக்கிறார்கள்! அதாவது, தேசத் துரோகம் செய்பவர்களை தண்டிக்கும் சட்டப் பிரிவு 124 A, நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள்!

எந்த இயக்கம் தேசவிடுதலைக்காக பாடுபட்டதோ, எந்த இயக்கத்தில், தேச துரோகத்தை கனவிலும் நினைக்காத தியாக உள்ளங்கள் இருந்தனவோ, இன்று அதே இயக்கம் தேசதுரோகம் செய்ய தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது! தேசத் துரோகிகளின் கூடாரமாகி இருக்கிறது!

இது ஏதோ கண்மூடித்தனமாக சொல்லப்பட்டது என்றோ, பிழையாக இடம் பெற்றது என்றோ கருத இடமில்லை! காங்கிரசார் மனதில், தேசதுரோகமும், இந்நாட்டின் மீது வெறுப்பும் ஆழப்பதிந்திருந்தால் மட்டுமே இதுபோன்று கூறியிருக்க முடியும்! அதை உறுதிப்படுத்தும் விதமாக, வேறு சில வாக்குறுதிகளும் வெளியாகியுள்ளன!

“தீவிரவாதிகளுடன் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!

அஃப்ப்ஸா எனப்படும் ராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டம் நீக்கப்படும்!

பாதுகாப்பு படையினரை வன்மையாக தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும்!” எப்படி இருக்கிறது?

“தீவிரவாதிகளே! பாகிஸ்தானியர்களே! நாட்டில் எங்கு வேண்டுமானாலும் குண்டுவைத்து மக்களைக் கொல்லுங்கள்! உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இராணுவத்தினரை பணியிலிருந்து நீக்கி விடுவோம்!” என்று மட்டும்தான் கூறவில்லை! மற்றபடி, இந்நாடு துண்டுத்துண்டாகி சிதற என்னவெல்லாம் வழியுண்டோ, அதையெல்லாம், சிரமேற்கொண்டு செய்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்கள்!

நம் நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப் பாட்டையும் கட்டமைக்க நம் முன்னோர்கள் எத்தனை பாடுபட்டிருப்பார்கள்! அதை, தவிடு பொடியாக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரசை, உயிருடன் உலவவிடலாமா? காங்கிரசுக்கு வாக்களிப்பது நமது அன்னைக்கு வாக்கரிசி போடுவதற்கு சமமாகும்!

நாடு இன்று பாதுகாப்பு, உற்பத்தி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், விவசாயம், கல்வி, வளர்ச்சி, பொருளாதாரம், என்று பலத்துறைகளில், சர்வதேச அளவில், முன்னேறி வருகிறது! வளர்ந்த நாடுகளுடன் போட்டிப்போடும் வல்லமையை பெற்றுவருகிறது! அதை சீரழிக்க முனைந்திருக்கிறது காங்கிரசு!

காங்கிரஸ் இந்நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து! அவர்களுக்கு வாக்களித்து மீண்டும் வாழ்வளிப்பது, வீட்டிற்குள் கொடிய நச்சுப்பாம்பை உலவவிட்டு உறங்குவதற்கு ஒப்பாகும்!!

நாம் உயிருடன் இருக்க வேண்டுமானால், காங்கிரஸின் உயிர்பிரிய வேண்டும்!

நமது தன்மானம் காக்கப்பட வேண்டுமானால், காங்கிரஸ் நிர்வாணமாக்கப்பட வேண்டும்!

நமது எதிர் காலம் வளமையாக இருக்க வேண்டுமெனில், காங்கிரஸ் நிர்மூலமாக வேண்டும்!

நமது குழந்தைகள் ஒழுக்கமாக வளர வேண்டுமெனில், காங்கிரஸ் சீர்குலைய வேண்டும்!

காங்கிரஸ் என்னும் ஆபத்திலிருந்து நம்நாட்டை காக்கவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது! காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிப்பதெ மிகப்பெரிய தேசசேவை!!

– ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...