மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை..
இந்த நாட்டுடைய வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள்.
இன்று அம்பேத்கர், அம்பேத்கர் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் அனைத்து எதிர்கட்சிகள் தலைவர்களும் அம்பேத்கரின் கருத்துக்கு நேர் எதிரான கருத்தை மட்டுமே பேசுகிறார்கள்.
ஒன்றியங்கள் சேர்ந்தது தான் இந்தியா,
இந்தியா ஒரு நாடல்ல என்று ராகுல் காந்தி முதல், ஸ்டாலின், சீமான், இரஞ்சித் வரை வாய் கூசாமல் சொல்கிறார்கள். ஆனால் இந்தியா தட் இஸ் பாரத் என்று சொன்னவர் அம்பேத்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் கருத்துக்கு நேர் எதிராக பேசுபவர்கள் தான் அரசமைப்பை காப்போம் என்கின்றனர். அம்பேத்கரின் கருத்தை முன்னெடுக்கும் பாஜகவை எதிரி என்கின்றனர்.
மத்திய அரசுக்குத் தான் அதிக அதிகாரம் இருக்க வேண்டும். அதுவே இந்த நாட்டுக்கு நல்லது என்று தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னவர் திரு.அம்பேத்கர் அவர்கள்.
இன்று அம்பேத்கரை களவாட நினைக்கும் திமுக மாநில சுயாட்சி என்று பேசுகிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்பது அம்பேத்கரின் கருத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் வரலாற்றை மாற்ற நினைக்கும் அழிவு சக்திகள், அம்பேத்கரின் கருத்தையும் மாற்ற நினைக்கிறது.
அரசிலமைப்புச் சட்டம் 370வது பிரிவை அமுல்படுத்தமாட்டேன் என்று சொன்னவர் அம்பேத்கர். ஷேக் அப்துல்லா 370வது பிரிவை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டபோது, அவரை வெளியே போகச் சொன்னவர் அம்பேத்கர். ஆனால் சட்ட அமைச்சர் பாராளுமன்றத்தில் இல்லாத நேரமாகப் பார்த்து 370வது பிரிவை அமுல்படுத்தியது காங்கிரஸ். அன்றைய பிரதமர் நேரு. அரசியலமைப்பின் அனைத்து ஷரத்துக்களையும் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் அம்பேத்கர் தான். ஆனால் அவர் அவையில் இல்லாத நேரத்தில் கொண்டு வரப்பட்டது தான் 370வது பிரிவு.
அப்படிப்பட்ட 370வது பிரிவை தூக்கிப் பிடிக்கும் எதிர்கட்சிகள், இன்று வாய் கூசாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்கிறது. 370வது பிரிவை நீக்கி அம்பேத்கரின் கருத்துக்கு மதிப்பளித்த மோடி இன்று அவர்களின் எதிரி ஆகிவிட்டார்.
அரசலமைப்புச் சட்டத்தில் சோஷியலிஸ்ட், செக்யூலர் வார்த்தைகளை சேர்க்க வேண்டாம் எனச் சொன்னவர் அம்பேத்கர். நேருவும் அவர் கருத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் எமர்ஜென்சி காலத்தில், எந்த வித விவாதமும் இல்லாமல் இந்த வார்த்தைகளை சேர்த்தது இந்திரா காந்தி. அப்படி சேர்க்கப்பட்ட வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அரசியல் செய்யும் கட்சிகள் தான் இன்று அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கின்றன.
அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்றால் எமர்ஜென்சியில் சேர்க்கப்பட்ட இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் ஒத்துக் கொள்ளுமா?
அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி இன்று அவரை தூக்கிப் பிடிப்பது போல் நடிக்கிறது.
அரசியலைப்புச் சட்டம் உருவாக்க வேண்டிய அரசியலமைப்பு சபையில் அம்பேத்கருக்கு இடமே இல்லை. 296 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அம்பேத்கரை உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொண்டது காங்கிரஸ். அந்த உறுப்பினர்களில் இருந்த ஒரு பட்டியிலின தலைவர், தனது இடத்தை அம்பேத்கருக்கு விட்டுக் கொடுத்தார். அதன் பிறகு நடந்தது வரலாறு. நமது நாடின் அரசமைப்பை எழுதுவதற்கு வெளிநாட்டில் இருந்து வல்லுனரை வாவழைக்கலாம் என்பது தான் நேருவின் திட்டம். நம்மிடமே அம்பேத்கர் இருக்கும் போது எதற்காக வெளிநாட்டவர் என்று கேட்டு, அம்பேத்கர் பெயரை சொன்னவர் மஹாத்மா காந்தி. அரசமைப்பு சபையின் உறுப்பினராக கூட வந்துவிடக்கூடாது என்று நினைத்த காங்கிரஸ் கட்சியை மீறி, தன்னுடைய திறமையால், அரசமைப்பு வரைவுக் கமிட்டியின் தலைவராக உயர்ந்தார் திரு.அம்பேத்கர்.
அம்பேத்கர் வந்துவிடவே கூடாது என்று நினைத்த காங்கிரஸ் கட்சியா, அரசியலமைப்பை காக்கப் போகிறது. ஸ்டாலினும், திருமாவும், சீமானும், ரஞ்சித்தும் இந்த காங்கிரஸ் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அதற்கு மனசாட்சியே இல்லாமல் அம்பேத்கரையே பயன்படுத்துகிறார்கள்.
1951-ல் நேரு அமைச்சரவை கொடுத்த நெருக்கடியால் தனது பதவியை ராஜினமா செய்தார் அம்பேத்கர். 1952-ல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி, அவரை தோற்கடித்த கட்சி காங்கிரஸ்,. 1954-ல் சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார். மீண்டும் அவரை தோற்கடித்தது காங்கிரஸ்.
அம்பேத்கர் மறைந்த பிறகு கூட அவருக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைத்துவிடக்கூடாது என்று கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டது காங்கிரஸ். நேரு உயிரோடு இருக்கும் போதே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. அவரே கொடுத்து, அவரே வாங்கிக் கொண்டார். இந்திராகாந்தியும் அவரே அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துக் கொண்டார். ஆனால் அம்பேத்கர் பெயர் கூட இவர்களுக்கு நினைவில்லை .
1990-ம் ஆண்டு விபி சிங் பிரதமராக இருந்த போது தான் அண்ணல் அம்பெத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது.
அன்று விபி சிங் பிரதமரானது பாஜகவின் தயவில் தான் என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. அதாவது அம்பேத்க்ர் மறைந்து 34 ஆண்டுகளாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவில்லை. விருதுக்கான பரிசீலனையில் கூட அவர் பெயர் வரவில்லை என்பது தான் காங்கிரஸ் கட்சியின் சாதனை.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் அம்பேத்கருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து மரியாதைகளும் கிடைக்கிறது. உண்மையில் அம்பேத்கரை கொண்டாடுவது பாஜகவும், மோடியும் மட்டும் தான்.
அரசியலமைப்பை மொத்தமாக சிதைத்த காங்கிரஸை தூக்கிப் பிடித்துத் கொண்டு, எப்படியாவது காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி, இந்த நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் அம்பேத்கர் பெயரைச் சொல்வதை, அவரது ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது…
தகவல் உதவி : “சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்” ஆசிரியர் ” டாக்டர் ஹெச்வி.ஹண்டே..
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |