கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

 கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

இந்தச் செடியின் இலைகளை உண்டால், இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களைப்  பலப்படுத்தி மனிதனுக்கு நோய் இல்லாமல் செய்து பாதுகாக்கின்றது.

 

மனித உடம்பு, பருத்து வளரச் சுண்ணாம்பு சத்தும், இரும்புச்சத்தும் தேவை. இந்த உடல் வளர்ச்சிக்கு வேண்டிய இரும்பு சத்து முழுவதும் இந்தச் செடியின் இலையைப் பச்சையாக உண்பவர்களுகுக் கிடைக்கும். இதை மருந்தாக செய்து உண்பவர்களுக்குக் கிடைக்கும். இதை மருந்தாக செய்து பயன்படுத்துபவர்களுக்கும் உணவாகச் சமைத்து உண்பவர்களுக்கும் பேரு நன்மையை உண்டாக்குகிறது. உடலை நோயின்றி காக்கும். இரும்புச் சத்தை உடலுக்கு கொடுக்க வல்லது. இதை உடலை வளர்க்கும் சஞ்சீவியாகக் கருதப்படுகிறது.

 

இந்த  இலையைத் தினமும் காலையில் கிராமமக்கள் பல் தேய்க்க உபயோகிக்கிறார்கள். இந்த இலையின் நான்கோ அல்லது ஐந்தோ பறித்து நன்றாகக் கசக்கிப் பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக இருக்கும். ஈறுகள் இந்த இலையின் இரும்புச்சதைப்பெற்று கெட்டியாகவும், பலம் பொருந்தியதாகவும் ஆகும். இந்த இலையைக் கொண்டு வந்து அரைத்து ஒரு மணி நேரம் வைத்து தலை மூழ்கினால் கண் குளிர்ச்சியாக இருக்கும். தலைமுடி உதிராமலும், கருமையாகவும் இருக்கின்றது. பொடுகுகளை அகற்றுகிறது.

 

இந்த இலையுடன் கொஞ்சம் சுண்ணாம்பும், புகையிலையும் சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்து வைத்து சிறிதுநேரம், பொறுத்திருந்து நீரில் தலை மூழ்கினால், தலைமுடியின் உள்ளே மறைந்து வாழும் ஈறு, பேன் போன்றவை மயங்கியோ, அல்லது இறந்தோ நீரில் மிதக்கக் காணலாம்.

 

இந்தச் செடியை இலையுடன் கொண்டு வந்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி, நிழலில் காயவைக்க வேண்டும். அளவு தேங்காய் எண்ணெயிலோ, நல்லெண்ணயிலோ போட்டுக் காய்ச்சி பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதைத் தினமும் தலையில் தடவி வந்தாலும், தலையில் தேய்த்து தலை மூழ்கினாலும் தலைமுடி கருமையுடனும், உதிராமலும் இருக்கும். நரையைப் போக்கும்.

 

பெண்களுக்கு இந்தச் செடியின் இலைகள் மிகவும் இன்றியமையாததாகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்யும். இதை உண்டால் பெண்களின் வெள்ளைப்படுதல் நிறுத்தப்படும். இதைக் கிதமாகவும், லேகியமாகவும் செய்து உபயோகிக்கலாம்.

இந்த இலையை உண்பதால் உடம்பில் உள்ள சிவப்பு அணுக்களை குறையாமல் பாதுகாத்து வைக்கின்றது. இதனால் இந்த இலையை உண்பதால் இதில் உள்ள இரும்புச்சத்து உடம்பைப் பாதுகாத்து, உடல் உறுப்புக்களை, பாதுகாத்து, தலைமுடியைப் பாதுகாத்து நீண்டநாள் வாழ வைக்கின்றது.

 

வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை அரைத்து அடை தட்டிக் காயவைத்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் ஊறவைத்துத் தேய்த்தால் முடி கருத்துச் செழித்து வளரும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து நாள்தோறும் காலை, மாலை அரைத்தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டுவர இளவயதில் தோன்றும் நரை மாறும்.

சுத்தமான கைப்பிடியளவு கரிசாலை இலையுடன் 9 மிளகையும் சேர்த்து நெகிழ அரைத்து இரண்டு உருண்டைகளாக காலை மாலை உண்டு 7 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். கண்களில் இருக்கும் மஞ்சள் நிறமும் மாறிவிடும்.

கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, சிறுசெருப்படை இவற்றை வகைக்கு சமஅளவில் எடுத்து வெய்யிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சீசாவில் பத்திரப்படுத்தி காலை, மாலை அரை தேக்கரண்டியளவு எடுத்து அதற்குச் சமன் சர்க்கரை சேர்த்து கொடுத்து வந்தால் சோகை நோய் குணமாகும். இவ்விதமாய் இதனைத் தொடர்ந்து 21 நாட்கள் கொடுக்க வேண்டும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...