பாகிஸ்தானின் கேவலம் காரணம்தான் என்ன…?

குரானில் மட்டுமே எல்லா அறிவும் உள்ளதாக முடிவுசெய்து அதை வாழ்க்கை நெறியாகவும், தேசத்திற்கான வழிகாட்டு தலாகவும் ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் ஆட்சி நடத்தினால் அந்த தேசமும், மக்களும் அழிவிற்கு செல்வார்கள். இதற்குசிறந்த உதாரணம் பாகிஸ்தான்.

அடுத்தடுத்த நாட்களில்தான் பாரதமும், பாகிஸ்தானும் விடுதலை பெற்றது.எழுபது வருடங்களில் இரண்டு நாடுகளின் நிலை என்ன….? கிட்டத்தட்ட பிச்சைக்கார தேசமாக பாகிஸ்தான் மாறிவிட்டது. இந்த கேவலத்திற்கு காரணம் என்ன…?

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நாட்டையும், நாட்டுமக்களின் வாழ்க்கை முறைகளையும் உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குரானை காட்டி மக்களை ஏமாற்றியதுதான்.

எந்த விதமான வளர்ச்சி திட்டங்களும் கிடையாது. எவன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் காஷ்மீரை கைப்பற்றுவது பற்றியே சிந்தித்து மக்களை பிச்சைக் காரர்களாக வைத்துள்ளனர்.

எழுபது ஆண்டுகளில் பாகிஸ்தான் சாதித்தது என்ன…?

காஷ்மீரை மீட்க பழங்குடியினருடன் இந்தியாமீது படையெடுத்தனர். இதற்கு அவர்கள் வழக்கம் போல வைத்தபெயர் ஜிஹாத். அதாவது புனிதப்போர்.

புனிதப்போர் என்று இன்று எந்த பாகிஸ்தானியும், இந்திய முஸ்லீம்களும் அதை ஒத்து கொள்ள மாட்டார்கள். காரணம் அந்த படை வந்தவழி நெடுகிலும், ஆக்கிரமித்த இடங்கள் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள்.

இதில் இந்து, முஸ்லிம், சீக்கியர் எவரும் தப்பவில்லை. பாகிஸ்தானோட சேர்வதற்கு ஆதரவாக இருந்த காஷ்மீர் முஸ்லிம்கள்கூட இதனால்தான் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு இந்தியாவுடன் சேர்ந்தனர்.

அதன் பின் நடந்தது தெரிந்த கதை. ..*

இந்தியாவை ஒழிப்பதே லட்சியமாக கொண்டு 1971 ல் நடந்த வங்கப்போர் வரை ஆட்சியை நடத்தினர். எந்தவிதமான முன்னேற்றமும் கிடையாது.

அதன் பின் அமெரிக்க, ரஷ்யா பனிப்போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து பிச்சை எடுத்தனர்.

ஆப்கனில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முடிவுக்குகொண்டு வர அமெரிக்காவிற்காக  ஆப்கன் தீவிரவாதிகளுக்கு உதவிகள்செய்து அமெரிக்க பணத்தை வாங்கி நாட்டை ஆட்சிசெய்தனர். இஸ்லாமிய கல்விக்கென்று மதரஸா, மசூதிகள் கட்டுவதற்கு சவூதியிடம் பணம்பெற்று வண்டி ஓட்டினர்.

ஆப்கன் நஜிபுல்லா வீழ்ந்த பின் தாலிபான்களுக்கு அமெரிக்க உதவியை பெற்றுக் கொடுத்து அதில் வருமானம்பார்த்தனர்.தாலிபான்களை தயார்படுத்த மதரஸாக்கள் என தொடர்ந்து சவூதியிடம் பணம் பெற்றனர்.

தாலிபான்கள் ஆட்சியைபிடித்த பின் நியூயார்க் இரட்டை கோபுர விமான தாக்குதலுக்கு பின் தாலிபான்களை அழிக்க களம் இறங்கிய அமெரிக்காவுடன் ஒத்துழைத்து அதற்கும் பணம்பார்த்தனர்.

இஸ்லாமிய அனுகுண்டு தயாரிப்பதற்கு என்று உலகமுஸ்லிம் நாடுகள் அனைத்திலும் பணம் பெற்றனர்.தயாரித்த அணு குண்டு ரகசியத்தை வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுக்கு கள்ளத்தனமாக விற்று பணம்பார்த்தனர்.

இதற்கிடையில் ஆப்கனில் உற்பத்தியாகும் அபினை அடிமாட்டு விலைக்கு வாங்கி உலகம் முழுக்க கடத்தி பணம்பார்த்தனர்.ஆப்கன் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா சப்ளைசெய்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பிறநாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு கள்ள ஆயுத சந்தையில் விற்று காசு பார்த்தனர். இலங்கையில் ஓயாத அலைகள் என்ற பெயரில் நடத்திய தாக்குதல்களில் அரை டஜன் இலங்கை விமானப்படை விமானங்களும், பல கவச வாகனங்களும் அழிக்கப்பட்டு புலிகள் கை ஓங்கியதும் இதன் பின்னணி தான். *

சில வருடங்களுக்கு முன்பு உலகபொருளாதார மந்த நிலையில் அனைத்து நாடுகளும் தள்ளாடிய போது மூன்று நாடுகள் மட்டும் எந்தவிதமான தாக்கமும் இல்லாமல் நிலைத்து நின்றது. அது… இந்தியா, சீனா, பாகிஸ்தான்.

இந்தியாவும், சீனாவும் உற்பத்தி நாடுகள், உள்நாட்டு உற்பத்தியும், வளங்களும் அதிகம். ஏற்றுமதியில் பலமான நாடுகள் என்பதால் தப்பித்தன. ஆனால் எந்த விதமான தகுதியுமில்லாத பாகிஸ்தான் எப்படி சமாளித்தது உலக நாடுகளே வியந்தது. பாகிஸ்தான் பொருளாதார மந்த நிலையில் சிக்காமல் தப்பித்தகாரணம் பிறகு மெதுவாக தெரிய வந்தது. அரசின் பொருளாதாரத்திற்கு இணையாக உலகலாவிய போதைமருந்து கடத்தல் வருமான பொருளாதாரம் இருந்ததால் தப்பித்தது.

பாகிஸ்தானின் கேவலமான மறுபக்கம் இன்னமும் நிறைய உள்ளது.

இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கூட்டணி அமைத்து பலூசிஸ் தான் வழியாக சாலை அமைத்துக்கொள்ள அனுமதிகொடுத்து பணம் பார்த்தது.

சீனாவும் பாகிஸ்தானை நம்பி பலலட்சக் கணக்கான கோடிகளை அந்த திட்டத்தில் கொட்டி உள்ளது. இப்போது நமது பிரதமர் மோடி பலூச்பிரச்சனையை கையில் எடுத்ததும் சீனா செய்வதறியாமல் திகைத்துநிற்கிறது.

கிட்டத்தட்ட பஸ் ஸ்டாண்ட் விபச்சாரி மாதிரிதான். உழைக்காமலேயே உலக அரசியலை வைத்தே எழுபது ஆண்டுகள் சொந்தமக்களை ஏமாற்றி பிழைப்பு ஓட்டிவிட்டது.

மாறி வரும் உலக அரசியல் சூழ்நிலையில் இன்று பாகிஸ்தானை சீந்த ஆள்இல்லை.

மதத்தின் பெயரால் வாரி கொடுத்த வள்ளல் சவூதியே பொருளாதாரத்தில் தள்ளாடுவதால் பாகிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்திவிட்டது. ஆப்கன் பிரச்சனையை முன்னிட்டு உதவிசெய்த அமெரிக்கா இப்போது பாகிஸ்தானை கைகழுவி விட்டது.

CPEC எனப்படும் சாலை பணி பலூச் பிரச்சனையால் தேக்கமடைந் திருப்பதால் சீனாவும் பாகிஸ்தானை முறைத்துக் கொண்டுள்ளது. எந்தநேரத்திலும் முதலீடு செய்த பணத்தை கொடு அல்லது நாட்டின் ஒருபகுதியை எழுதி கொடு என சீனா கேட்கும் நிலையில் உள்ளது.

ஆக மொத்தம் இது நாள்வரை உழைக்காமலேயே உலக நாடுகளுக்கு மாமா வேலை பார்த்து பிழைத்த பாகிஸ்தானிற்கு இப்போது வருமானம் வரும் அனைத்து வழிகளும் அடை பட்டு போய் விட்டது.

கொஞ்சமாவது ஆறுதலாக இருந்தது வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் பாகிஸ்தானியர்கள் அனுப்பும் பணம்தான். இப்போது அதற்கும் வேட்டு வைக்கப்பட்டு விட்டது.

சிரியாவின் ஐ.எஸ் பிரச்சனைக்கு பிறகு இஸ்லாமிய தீவிரவாதத்தை வேரறுக்கும் வேலையில் வளைகுடா நாடுகளே தீவிரமாக உள்ளது் பாகிஸ்தானின் கடந்தகால வரலாற்றை புரட்டி பார்த்து தீவிரவாதத்தின் உற்பத்தி தொழிற்சாலை பாகிஸ்தான் என புரிந்துகொண்டன. இப்போது ஒவ்வொரு நாடாக தங்கள் நாடுகளில் பணி புரியும் லட்ச கணக்கான பாகிஸ்தானிய தொழிலாளர்களை திருப்பி அனுப்ப ஆரம்பித்து விட்டன. இப்போது அதற்கும் ஆப்பு.

சொந்த வருமானமெம் இல்லை, பிச்சை போட மஞெந்த மகராசன்களும் இல்லை. வருமானத்திற்கு வழியில்லாமல் பாகிஸ்தான் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அதன் விளைவாக பிரதமர் அலுவலக கார்களை ஏலம் போட்டு விற்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

சற்று சிந்துத்து பாருங்கள். எழுபதுவருட வரலாற்றில் மதத்தின் பேரில் நாசமாக போனதுதான் மிச்சம்.இத்தனை காலம் கிடைத்த அமெரிக்க, சவூதி, சீனா உதவியில் திட்டங்களை தீட்டியிருந்தால் உலகத்தின் பணக்கார நாடாக பாகிஸ்தான் மாறியிருக்கும்.

பாகிஸ்தான் விமானப்படையின் 66% பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என விமானப்படை கதறுகிறது. ஏற்கனவே பழுதுபார்க்க அனுப்பிய விமானப்படை விமானங்களை திரும்ப கொண்டு வருவதற்கான பணம் இல்லாமல் துருப்பிடித்து கிடக்கிறது.

அரசாங்கத்தை நடத்த பணம் தேவை. உலக வங்கி காறி துப்பி நிதி கொடுக்க மறுத்துவிட்டது. அரசு ஊழயர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட துப்பில்லாமல் பாக் பிரதமர் இம்ரான்கான் கையை பிசைந்து கொண்டுள்ளார். * சரி, இத்தனை ஆண்டு காலமாக உலக நாடுகளிடம் வாங்கியபணம் என்ன ஆனது…?

அனைத்தும் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளை தயாரிக்கவும் செலவிடப் பட்டுள்ளது.

தீவிரவாதிகளை வளர்த்து விட்டு பாக் இதுவரை சாதித்தது என்ன…? ஒருகூந்தலும் கிடையாது. பழைய கணக்குகளை ஒவ்வொரு நாடும் தீர்த்துக் கொண்டுவருகிறது.பாகிஸ்தானுக்குள் ஆள் இல்லா விமானங்களை அனுப்பி தீவிரவாதிகளை அமெரிக்கா போட்டுதள்ளுகிறது.

ஆப்கன் நாசமாகபோனதற்கு காரணம் பாகிஸ்தான் என்ற கோபம் ஒவ்வொரு ஆப்கன் மக்களிடமும் இருக்கிறது. எல்லையில் பாக் ராணுவத்தினரை கண்டாலே ஆப்கன் சுட்டு தள்ளுகிறது.

ஷியா நாடான ஈரான் தனது எல்லையிலிருந்தே பீரங்கி தாக்குதல்களை நடத்தி தினம்தினம் தீபாவளி கொண்டாடுகிறது.

இந்தியா எல்லை தாண்டிசென்று சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தி வந்தது.போதா குறைக்கு வளர்த்த கிடா மார்பில் பாயந்த கதையாக ஆப்கனில் நுழையமுடியாத தாலிபான்கள் பாகிஸ்தான் மசூதிகளிலும், பள்ளிகளிலும் தற்கொலை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கூடிய சீக்கிரம் பாகிஸ்தான் திவால் ஆன செய்திவரும்.

பொம்மியா செல்வராஜன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

100 நாளுக்கான செயல் திட்டத்தின் ம ...

100 நாளுக்கான செயல் திட்டத்தின் முக்கிய முன்முயற்சிகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற் ...

செங்கோடி 2024 பயிற்சியில் பங்கேற்ற இந்திய விமானப்படை ஜூன் 04 முதல் ஜூன் 14 வரை அமெரிக்க ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகள ...

பாதஹஸ்தாசனம் காணொளிக்காட்சிகளை மோடி பகிர்ந்துள்ளார் பாதஹஸ்தாசனம் அல்லது கைகளால் கால்களைத் தொடும் யோகா நிலை ...

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்ப ...

ஸ்மிரிதி வனம் இடம் பெற்றிருப்பது குறித்து மோடி மகிழ்ச்சி 2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை எ ...

இந்தியா-வின் முற்போக்கான பாதை என்ற தலைப்பில் நாளை நடக்கும் மாநாடு 2023 டிசம்பர் 25ந்தேதி. "பாரதிய நியாய சன்ஹிதா 2023", ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...