சித்த மருத்துவம்

சித்த மருத்துவம்சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், போகர், வல்லளார் இவர்களை போன்று சாகாநிலை பெற்றவர்களே சித்தர்கள் இவர்கள் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சித்தர்கள் உலக மக்கள் அனைவரும் நோய்களின்றி வாழ 64 கலைகளை கூறியுள்ளார்கள். அவற்றில் குறிப்பாக மருத்துவத்தை தந்துள்ளார்கள். இதை ஒவ்வொருவரும் பயின்று மருத்துவர் ஆகவேண்டும். நமக்கு நாமே மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். அனைவரும் நோய்களின்றி முழு நலம் பெற வேண்டும் இதில் சித்த மருத்துவத்தின் அடிப்படையான தத்துவத்தை எளிமையாகவும் சுருக்கமாகவும் கூறியுள்ளோம். அனைவரும் படித்து முழுநலம் பெறவும்.

உடல் 96 தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதனையும் மனித இனத்திற்கு பஞ்ச பூத அடிப்படையில் ஏற்படும் நோய்கள் மொத்தம் 4448 என்றும் அவை

பஞ்ச பூதம்

பிரிதிவி பூமி

அப்பு நீர்

தேயு நெருப்பு

வாயு காற்று

ஆதாயம் வானம்

 

இவற்றில் வானமும், பூமியும் மறை முகமாகவும் மற்ற மூன்றும் நேரடியாகவும் அதனதன் அளவுகளில் நம்மை காக்கின்றது. இதில் மாற்றம் அதாவது வாதம்-பித்தம்-சிலேத்துமம் சித்த மருத்துவ குறிப்புகள்இவை அதன் அளவுகளில் இருந்து மாறுபடும் பொழுது நமக்கு நோய்கள் பற்றுகிறது. இதனால் ஏற்படும் நோய்கள் அவற்றின் விளக்கங்கள் முதலியவற்றையும் தெளிவாக கூறியுள்ளார்கள். இதை மீறி ஒன்றும் இரா என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அனைத்து நோய்களுக்கும் மூலிகைகளையும், தாது, சீவ வர்க்கங்களைக் கொண்டு முடிக்கும் மருந்துகளையும் கூறியுள்ளார்கள். இவற்றை பயன்படுத்தி நாம் முற்றிலும் நோயைக் குணப்படுத்த முடியும். நாம் நோய்களைக் கண்டு பயப்படத் தேவையில்லை. நாம் பயப்படும் பொழுதுதான் நம்மை இன்னும் பல நோய்கள் மறைமுகமாக தாக்குகின்றன. புதிதாய்க் கூறப்படும் நோய்கள் அனைத்தும் ஏற்கனவே கூறப்பட்டவையே அதை தற்பொழுது நவீன அச்சுறுத்தும் பெயர்களாக மாறி வருகின்றதே தவிர நோய்கள் ஒன்றே. நோய்கள் எதுவாக இருந்தாலும் எளிமையாக மூலிகைகள் மூலமாகவோ, சிவ பயிற்சிகளின் மூலமாகவோ தீர்த்துக் கொள்ள முடியும்.

நோய் எவ்வாறு தோன்றுகிறது.

காற்று, வெப்பம், நீர் இவை அதன் அளவுகளில் இருந்து மாறுபடும் போது நோய் ஏற்படுகிறது. நாம் உடம்பின் தேவைக்கு உணவு, காற்று, நீர் இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

அதில் வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாத பொருள் கழிவுகளாக மாறுகின்றன. அவை முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். அப்படி வெளியேற்றப்படாத கழிவுகள் தேங்கி, அழுகி, புளித்து, நச்சுக்காற்றாகவும், நச்சுப் பொருள்களாகவும் மாறுகிறது.

இவையும் வெளியேறவே முயலுகின்றன. இவை வெளியேறும் முயற்சியில் அவ்வப்பகுதியில் துன்பம் ஏற்படுவதைதான் அந்தந்த இடத்தையும் வெளியேறும் விதத்தையும் ஒட்டியே வௌ;வேறு பெயர் கொடுக்கின்றோம்.

அவை உடலில் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், மலக்குடல், தசை கோளங்கள் இவை அதனதன் வேலைகளை செய்து கழிவுகளை வெளியேற்றப்பட வேண்டும். வெளியேற்றப்படாத கழிவுகள் தேங்கி உறுப்புகளை பலவீனப்படுத்துகின்றது. உறுப்புகள் பலவீனம் அடையும் போது வேலைகள் தடைபடுகிறது.

வேலைகள் தடைபடும் பொழுது நமக்கு தேவையான சக்தி கிடைப்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட உறுப்பு ஒன்றாக இருந்தாலும் வெளியில் பல நோய்க் குறிகளை ஏப்படுத்துகிறது. இதைத்தான் நோய் ஒன்றே குறிகள் பலவாம் என்று கூறிப்பிடுகின்றோம்.

நாம் பலமாக இருக்கும் போது அதாவது உள் உறுப்புகள் பலமாக இருக்கும் வேலையில் கல்லையும் கரைத்துவிடுகிறது அது பலவீனப்படும் போது தூசியைக்கூட கரைப்பதில்லை இவ்வாறே ஒவ்வாமை(யுடடநசபல)எனும் நோய் ஏற்படுகிறது.

சித்த மருத்துவம் நோய் அணுகாமலும் தடுப்பதற்குமான விதிகள்

தினம் இருமுறை மலம் கழிக்க

வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க

மாதம் இரு முறை புணர்ச்சி கொள்ள

வருடம் இரு முறை பேதி மருந்துகள் சாப்பிட

ஏன இவ்வாறாக மலம், சிறுநீர் இவற்றை அடக்கி வைக்காமல் ஒழுங்காக கழித்துக் கொண்டும், வாரம் இருமுறை அதாவது "ஆண்கள் புதன், சனி நாட்களிலும், பெண்கள் செவ்வாய்,வெள்ளி கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்" அன்றைய பொழுது புளி நீக்கி கார சார பதார்த்தம் கொள்ள வேண்டும். வெயிலில் திரிவதையும், புணர்ச்சியும் கூடாது. மாதம் இரு முறை மட்டும் புணர்ச்சி கொள்ள வேண்டும். வருடம் இருமுறை அதாவது 4 மாதங்களுக்கு ஒரு முறை வாந்திக்கும், 6 மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கும் மருந்துகள் சாப்பிட வேண்டும் அப்பொழுதுதான் உடம்பில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். இதனால் முத்தோடடும் சமன்படும். தினமும் நாம் மலம்-சிறுநீர் இரண்டையும் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும். இரண்டில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை முறையாக தீர்த்துக்கொள்ள வேண்டும் அவ்வாறு செய்வதால் நம்மை பல பெரிய நோய்கள் தாக்காது.

தினம் காலை, மாலை வேலைகளில் வீட்டில் மூலிகை சாம்பிராணி தூபம் போட வேண்டும். இரவு உணவில் அரை வயிறு உணவும், கால் வயிறு தண்ணீரும், கால் வயிறு காற்றும் இருக்கும் படி உணவு உண்ண வேண்டும்.

தண்ணீரை காயவைத்து பருக வேண்டும், மதிய வேலை உணவில் கண்டிப்பாக ஒரு கீரை குறிப்பாக அகத்தி, முருங்கை மற்ற ஏதேனும் ஒரு கீரை சாப்பிட வேண்டும். கருணைக் கிழங்கை அதிகம் சேர்க்க வேண்டும். ஆதிகமாக மோரையும், நெய்யை உருக்கியும், பசும்பாலையும், பழங்களை அதிகமாக சேர்க்க வேண்டும். அசைவ(மாமிச) உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பெரிய மிருகங்கiயும், கொடிய விலங்குகளையும் அடக்கி ஆட்சி செய்த நாம் தற்பொழுது சிறு சிறு கொசு, ஈ, புழு, பூச்சிகளுக்கெல்லாம் பயந்து வீட்டையும், சன்னல்களையும் மூடிக்கொள்ளும் அவலம் வந்துவிட்டது. ஏன்? நாம் நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பாக வைக்காததுதான் காரணம். சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு இருக்கும் இருப்பிடம் அனைத்திலும் மாசு கலந்துவிட்டது. நமக்கும் இனிவரும் நம் சந்ததியினருக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியும் இனி பெரிய அளவில் ஏற்படுத்தவும் போகிறது. இதைத்தடுப்போம். நோய்வொட்டா விதிகளை கடைபிடிப்போம்.

வீடுதோறும் கண்டிப்பாக ஒரு மரம் வளர்ப்பை கடைபிடிக்க வேண்டும் பெரிய மரங்கள் வைக்காவிடினும் சிறிய மரங்கள் மற்றும் தினமும் நமக்கு அதிகம் பயன்தரக்கூடிய முருங்கை அகத்தி இதுபோன்ற மரங்கள் வளர்க்க வேண்டும். நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாவது அதிதமாக குப்பைகளிலும் கழிவு நீர் தேக்கங்களிலும்தான் அதை சுத்தமாக வைக்க வேண்டும்.

இது போன்ற வேலைகளை நாமே உடனடியாக செய்ய வேண்டும். ஏன் செய்ய வேண்டும் என்று நினையாதீர். இதனால் நாம் நம்மையும் நம் சந்ததியினரையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க முடியும். நம்மை நோய் அண்டாமல் காத்துகொள்ள முடியும்.

Tags; சித்தர்களுக்கு, சாதி மதம், இனம் மொழி, தேசம், சித்த மருத்துவம், சித்த மருத்துவர், மருத்துவ குறிப்புகள்,

நன்றி லோகநாதன் சவூதி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...