எங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் கேட்கிறார்கள்

மகாராஷ்டிராவை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், செய்தசதியை பாஜக முறியடித்துள்ளது என்று, மத்திய அமைச்சர், ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் அஜித் பவாருடன் இணைந்து, பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

அரசு அமைப்பதற்காக ஆளுநர் வாய்ப்பு கொடுத்த போதிலும், இதுவரை, சிவசேனா உரிமை கோரவில்லை. மற்றொரு பக்கம், பாஜக 2014 ஆம் ஆண்டைவிட மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே, இதில் பாஜகவை சிவசேனாவால் எந்தவகையிலும் குறை சொல்ல முடியாது.

தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என்று தான், தேர்தலில் பிரச்சாரம் செய்தோம். மக்கள் அதற்காகவே, பாஜக-சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்தனர். இப்போது அவருக்கே முதல்வர்பதவியை தர முடியாது என சிவசேனா கூறியது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.

மக்களின் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாக இருந்த போதிலும், இது வரை ஏன் ஆட்சியை அமைக்க பாஜக முன்வர வில்லை, என்று மகாராஷ்டிராவில் மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். உங்களுக்கு அதிக எம்எல்ஏக்களை கொடுத்தோம், ஆனால் நீங்கள் ஏன், இந்த அசுத்தமான கூட்டணியை உருவாக அனுமதிக்கிறீர்கள் என பாஜகவை பார்த்து மக்கள்கேட்கிறார்கள். எங்கள் தீர்ப்பை மதியுங்கள் என மக்கள் சொல்லும்போது, அதை ஏற்றுத்தானே ஆக வேண்டும்.

சிவசேனா அதன் மதிப்புகளை “தனி பட்ட லாபங்களுக்காக” விட்டுக் கொடுத்தது. தனிப்பட்ட லாபங்களுக்காக ஒரு அசுத்தமான கூட்டணியை உருவாக்கிய வர்கள்தான் உண்மையில் சதி செய்தவர்கள். பாஜக அல்ல. காங்கிரசும் என்சிபியும் எங்களை, எதிர்க் கட்சியில் அமர வேண்டும் என்று மக்கள் ஆணையிட்டுள்ளனர், அதை ஏற்போம் என்று கூறிவந்தனர். இப்போது திடீரென்று நாற்காலியை பிடிக்க அவர்களுக்கு ஆசைவருவது சரியில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...