மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ்

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக தனித்து 132 இடங்களை கைப்பற்றியது.

முதல்வர் பதவி விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பதவியேற்க பாஜக மத்திய குழு ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, அன்றைய தினமே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த பட்னாவிஸ், ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் இதை ஏற்றுக் கொண்டு, ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். திட்டமிட்டபடி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பட்னாவிஸ் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. உள்துறை உள்ளிட்ட சில இலாகாக்கள் ஒதுக்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அமைச்சரவை பின்னர் விரிவாக்கம் செய்யப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக கூட்டணி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். புதிய முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஷிண்டே, அஜித் பவார் ஆகி யோருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, குமாரசாமி, ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

யோகி ஆதித்யநாத் (உத்தர பிரதேசம்). சந்திரபாபு நாயுடு (ஆந்திரா), நிதிஷ் குமார் (பிஹார்). பூபேந்திர படேல் (குஜராத்), ஹிமந்த பிஸ்வா சர்மா (அசாம்), பிரமோத் சாவந்த் (கோவா) உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை தமிழ்ச்செல்வன் அமைச்சராக வாய்ப்பு:

 மும்பை சைன் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன் 73,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் கடந்த 2014 முதல் இத்தொகுதி எம்எல்ஏவாக பதவி வகிக்கிறார். தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த பிலாவிடுதி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ்ச்செல்வன், துபாய் வேலைக்காக ஏஜென்ட் மூலம் மும்பைக்கு சென்றவர். ஏஜென்ட் ஏமாற்றியதால் மும்பையிலேயே நிரந்தரமாக தங்கிய அவர், படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தார். 2008-ம் ஆண்டு தீவிரவாத தாக்குதலின்போது மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் குண்டு காயமடைந்த 36 பேரை மருத்துவமனையில் சேர்த்து அவர்களது உயிரை காப்பாற்றினார். முதல்வர் பட்னாவிஸுக்கு நெருக்கமான இவர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...