டெபாசிட் இழந்த காங்கிரஸ்

70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்ட சபைக்கு, கடந்த 8ம்தேதி தேர்தல்நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதாதளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன்கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி – பா.ஜ., இடையேதான், போட்டி நிலவியது. பாஜக கடுமையான போட்டி காட்டியதால் அதன்  ஓட்டு சதவீதமும் கடந்த தேர்தலைவிட அதிகரித்துள்ளது. 8 இடங்களில் வெற்றிபெறும் பா.ஜ.,வுக்கு, கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.காங்கிரஸ்  நிலைமைதான் அந்தோ பரிதாபம். போட்டியிட்ட 66 இடங்களில் ஒருஇடத்தில் கூட அக்கட்சி முன்னிலை வகிக்கவில்லை. அதை விட, 63 இடங்களில் அக்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியதால் காங்கிரஸ்  கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ்  கட்சிக்கு வாய்ப்பளித்து, ஷீலா தீட்சித்தை முதல்வராக ஏற்றுக் கொண்ட டில்லி மக்கள், அதன்பின் தொடர்ந்து காங்., கட்சியை புறக்கணிப்பது இத்தேர்தல் முடிவிலும் வெளிப்படையாக தெரிகிறது. காங்., கட்சி சார்பில், அர்விந்தர்சிங் (காந்திநகர் தொகுதி), தேவேந்திர யாதவ் (பத்லி தொகுதி) மற்றும் அபிஷேக் தத் (கஸ்தர்பா நகர்) ஆகியோர் மட்டும் டெபாசிட் பெற்றனர்.

One response to “டெபாசிட் இழந்த காங்கிரஸ்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...