வடகிழக்கு மாநிலங்கள் அதிக தொகுதிகளில் களமிறங்கும் பாஜக

மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மேகாலயா, நாகாலாந்து தேர்தல்குறித்து பாஜக செயலாளர் ரிதுராஜ் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்தியஅரசு தாராளமாக நிதியுதவி வழங்கிவருகிறது. ஆனால் மாநில அரசுகள் திறம்பட செயல் படாததால் பல்வேறு திட்டங்களின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஊழல் விவகாரங்களால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தமக்கள், பிரதமர் நரேந்திரமோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதை முன்னிறுத்தி மேகாலயாவின் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மோடியின் சக்தி என்பதை மையமாககொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணிகட்சிகள் போட்டியிடும். மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபாரவெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணி அரசில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியை எதிர்த்து பாஜக களமிறங்குகிறது.

நாகாலாந்தில் முதல்வர் நெய்பியுரியோ தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்குகட்சி கூட்டணி ஆட்சி நடத்திவருகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரி ...

பசுமை ஹைட்ரஜன் குறித்த பிரதமரின் செய்தி மதிப்பிற்குரிய பிரமுகர்களே,விஞ்ஞானிகளே, புதுமைப் படைப்பாளர்களே, தொழில்துறைத் தலைவர்களே, எனதருமை ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்ட ...

ப.ஜ.க உறுப்பினர் சேர்க்கை மேட்டுப்பாளையத்தில் L.முருகன் தொடங்கிவைத்தார் மேட்டுப்பாளையம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான 'சங்கதன் பர்வா,சதாஸ்யத ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடு ...

சைபர் குற்றங்களை தடுத்திட கூடுதல் கமாண்டோக்கள் இலக்கு -அமித் ஷா சைபர் குற்றங்களை தடுத்திட 5 ஆயிரம் சைபர் கமாண்டோக்களை ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...