சட்டம் அனைத்திலும் மேலானது

தலைநகர் தில்லியில் சர்வதேச நீதித் துறை மாநாடு உச்சநீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டடத்தில் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஏ.போப்டே ஆகியோர் பங்கேற்றனர்.

2 நாள் நடைபெறும் இந்தமாநாட்டை காலை 10 மணிக்குத் தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது,

உண்மை மற்றும் சேவைதான் நீதித்துறையின் அடித்தளமாகக் கருதப்படுகின்றன. நாட்டில் எத்தனையோ துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபோல் நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டுவர நாங்கள் பழம் பெறும் ஆயிரக்கணக்கான சட்டங்களை நீக்கினோம். சட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம்.சட்டம் அனைத்திலும் மேலானது

மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை உண்மை மற்றும் சேவைக்காக அர்ப்பணிக்கபட்டது. அதிலும் அவர் ஒருவழக்குரைஞர் என்பது கூடுதல் சிறப்பு. தான் சந்தித்த முதல்வழக்கு குறித்து தனது சுயசரிதையில் மகாத்மாகாந்தி மிக விரிவாக எழுதியுள்ளார்.

சமீபத்தில், உலகளாவிய விவாதங்களுக்கு உட்பட்ட சிலமுக்கியமான நீதித்துறை தீர்ப்புகள் வந்துள்ளன. இந்ததீர்ப்புகளுக்கு முன்னர், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பலகவலைகளையும், சந்தேகங்களையும் வெளிப்படுத்தின, ஆனால் 1.3 பில்லியன் இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில்,

பயங்கரவாதிகள் மற்றும் ஊழல் வாதிகளுக்கு தனியுரிமைக்கு இனி இடமில்லை. இது உலகளாவிய சவால் களுக்கான நேரம். நாம் தீர்வுகளை எவ்வாறு நாடுகிறோம் என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது. சட்டத்தின்படி நடைபெறும் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் வழக்கமான ஒழுங்கு முறையின் படி தீர்வுகளை ஏற்றுக்கொள்வது தான் இதற்கு ஒரேபதில் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும் என்றார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பேசுகையில்,

இந்தியா பலகலாச்சாரங்கள் மற்றும் மரபுகளால் உருவான நாடாகும். இதுவே நாட்டின் நீதிஅமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கும் சமமாக பொருந்தும் உண்மையாகும். அனைத்துவகை நாகரிகங்களில் உள்ள கலாச்சார சட்டங்களையும் இந்திய நீதித் துறை ஒருங்கிணைத்துள்ளது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.