மோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்

இந்தியா வந்துள்ள டிரம்ப், டில்லியில் நிருபர்களை சந்தித்தபோது கூறியதாவது: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்ட இரண்டு நாட்களும், தொழில்துறை சி.இ.ஓ., உடனான சந்திப்பு ஆகியவை சிறப்பானதாக இருந்தது. 21 ஆயிரம்கோடி அளவுக்கு பாதுகாப்பு துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டுள்ளது. எரிசக்தி துறையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்ததுறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடியுடனான உறவு தனித்துவம் வாய்ந்தது. மோடி, உறுதியான, பெரிய, வலிமையான தலைவர். அவரைசந்தித்தது சிறப்பான தருணம்

கொரோனா வைரஸ் சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இந்த வைரசால், இந்தியாவில் பெரியளவில் பாதிப்பு இல்லை. சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபரிடம் பேசியுள்ளேன். அதனை கட்டுப்படுத்த சீனா நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆப்கனில் 99 சதவீதமக்கள் அமைதியை விரும்புகின்றனர். தலிபான்களுடன் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் குறித்தும், தெற்கு ஆசியாவில் அமைதிகுறித்தும் மோடியுடன் பேசியுள்ளேன். இந்த ஒப்பந்தத்தால், இந்தியா மகிழ்ச்சி அடையும்.

பயங்கரவாதத்தை ஒடுக்க மற்றவர்களைவிட அதிகளவில் பணியாற்றியுள்ளேன். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும். ஈரானைசேர்ந்த சுலைமானியை, கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அமெரிக்கா கொன்றுள்ளது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். பாகிஸ்தான் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தை வேரறுக்கவேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஐ.எஸ்., அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்துபணியாற்ற வேண்டும்.

உலகின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. அமெரிக்காவில், இந்தியர்கள் பல ஆயிரம்கோடி ரூபாய் முதலீடு செய்வார்கள் என நம்புகிறேன். ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக இறக்குமதிவரி விதிப்பது குறித்து பேசினோம்.

மதசுதந்திரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். மத சுதந்திரத்தையே விரும்புவதாக மோடி என்னிடம் தெரிவித்தார். பல்வேறு தரப்புமக்களிடம் பேசியதில் இருந்து மதசுதந்திரம் குறித்து எதிர் மறையான கருத்து வரவில்லை. இதற்காக இந்தியா கடினமாக உழைத்துள்ளது. சிஏஏ குறித்து மோடியுடன் பேசவில்லை. டில்லிகலவரம் குறித்து கேள்விப்பட்டேன். இது இந்தியாவின் உள்நாட்டுவிவகாரம். மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன். எச்1 – பி விசா குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.

பாகிஸ்தான் குறித்து பலவிஷயங்கள் பேசியுள்ளேன். இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் பெரியநெருடலாக உள்ளது. இரு நாடுகளும் பிரச்னையை தீர்க்க பணிபுரிந்துவருகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய என்னால் முடிந்ததை செய்வேன். அமைதியான மனிதரான மோடி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார். எந்தவொரு பிரச்னைக்கும் இருபக்கங்கள் இருக்கும். அதேபோல், காஷ்மீர் விவகாரத்திலும் இரு பக்கங்கள் உள்ளது. இந்தியா வலிமையான நாடு. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் வலிமை அவர்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...