இந்தியா வந்துள்ள நெதர்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப், ”இரு நாடுகளுக்கும் இடையே செமி கண்டக்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஸ்திரமான ஒப்பந்தங்கள் இந்த ஆண்டில் கையெழுத்தாகும் என நம்புகிறேன். இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற விரும்புகிறேன்,” என்றார்.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப், இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். பின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்தார்.
முன்னதாக, பத்திரிகையாளர்களிடம் வெல்ட்காம்ப் பேசியதாவது:
இந்தியாவுடன் அனைத்து மட்டத்திலுமான பங்குதாரர் நாடாக விளங்க நெதர்லாந்து விரும்புகிறது. இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற விரும்புகின்றன. குறிப்பாக, செமி கண்டக்டர், டிஜிட்டல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் போன்ற விவகாரங்களில் நெதர்லாந்தும் பங்கேற்க விரும்புகின்றன.
நீண்ட காலமாக கையெழுத்திடப்படாமல் இருக்கும், இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்கும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என நம்புகிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த, நெதர்லாந்து திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம், நெதர்லாந்து நாட்டின் ராணுவ அமைச்சர் ரூபன் பிரிகெல்மான்ஸ், நம் நாட்டின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |