தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் அரைத்து இரண்டையும் ஒரு டம்ளர் நீராகாரத்தில் போட்டுக் கலக்கி, காலையில் ஓர் வேளை மட்டும் ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால், பெரும்பாடு பூரணமாகக் குணமாகும்.
பிரசவித்த தாய்மார்கள் பால் கொடுக்க முடியாத நிலையில் இருந்தால், தரைப்பசலைக் கீரையின் ஒரு கைப்பிடியளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கரைத்துக் காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் தாய்பால் சுரக்கும்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, அரைத்த விழுதில் கால் பங்களவு மஞ்சளையும் சேர்த்தரைத்து வைத்துக் கொண்டு சிரங்குகளை நன்றாகக் கழுவி சாம்பல் ஒத்தடம் கொடுத்த பின் இந்த மருந்தைச் சிரங்கின் மேல் கனமாகப் பற்றுப் போட்டால் சிரங்கு ஆறிவிடும்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.