10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

கடந்த சிலமாதங்களாகவே, பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் இணையதளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது அதிகாரபூர்வமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பை அறிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் அமைச்சரவை, 10 பொதுத்துறை வங்கிகளை வெறும் நான்கு பொதுத்துறை வங்கிகளாக இணைக்க, ஒப்புதல் கொடுத்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அரசு தொடர்ந்து சம்பந்தப் பட்ட வங்கிகளோடு தொடர்பில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஏர்கனவே பொதுத்துறை வங்கிகளை இணைக்க, வங்கிகளின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்து இருக்கிறார்களாம்.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததுபோல, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஓரியண்டல்பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டுவங்கிகளும் நீரவ் மோடி புகழ் பஞ்சாப் நேஷனல்பேங்க் உடன் இணைக்கப்பட இருக்கிறது. இந்த இணைப்புக்குப் பின், இந்தஜோடி தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும்.

சிண்டிகேட்வங்கி, தென் இந்தியாவின் புகழ் பெற்ற கனரா வங்கி உடன் இணைக்கப்பட இருக்கிறது. சென்னையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி உடன் அலஹாபாத் வங்கி இணைக்கப்பட இருக்கிறது. ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும், யூனின் பேங்க் ஆஃப் இந்தியா உடன் இணைக்கப்பட இருக்கின்றன.

கடந்த டிசம்பர் 2018 வாக்கில்தான், பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்த விஷயங்கள் பொதுவெளிக்கு வந்தது. மத்திய ரிசர்வ்வங்கி கூட, இந்திய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்ட ஒருவலுவான வங்கி உருவானால், உலக அளவில் ஒருபெரிய வங்கியாக உருவாகலாம் எனச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

 

One response to “10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைக்க அமைச்சரவை ஒப்புதல்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...