மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக்கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில், புதுதில்லியில் இன்று, மண்டல ஊரக வங்கிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிச் சேவைகள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர், கூடுதல் செயலாளர், பொருளாதார நிதிச் சேவையின் உயர் அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, சிட்பி, நபார்டு ஆகியவற்றின் பிரதிநிதிகள், மண்டல ஊரக வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

43 மண்டல ஊரக வங்கிகளுடனான இந்த கூட்டம், வணிக செயல்திறன், டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொகுப்புகளில் வணிக வளர்ச்சியை ஊக்குவித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராமப்புற பொருளாதாரத்தை ஆதரிப்பதில் மண்டல ஊரக வங்கிகளின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, பிரதமர் விஸ்வகர்மா மற்றும் பிரதமர் சூரிய வீடு இலவச மின்சார திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் கடன்களை அனுமதிக்கும் போது, பயனாளிகளை தெளிவாக அடையாளம் காண்பதில், அதிக கவனம் செலுத்துமாறு, மண்டல ஊரக வங்கிகளை மத்திய நிதியமைச்சர் வலியுறுத்தினார். மண்டல ஊரக வங்கிகள் தரைமட்ட வேளாண் கடன் வழங்கலில் தங்கள் பங்கை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டன.

ஆய்வுக் கூட்டத்தில் விளக்கக் காட்சியின் போது, 2022-ம் ஆண்டில் வழக்கமான மறுஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து மண்டல ஊரக வங்கிகளின் நிதி செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை திருமதி சீதாராமன் பாராட்டினார், மேலும் எதிர்காலத்திலும் இந்த விரைவைத் தொடருமாறு ஊரக வங்கிகளை வலியுறுத்தினார். 2023-24 நிதியாண்டில் மண்டல ஊரக வங்கிகள் இதுவரை இல்லாத அளவுக்கு ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹7,571 கோடியை பதிவு செய்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...