உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை என எல்லாமே மருத்துவத்துக்கு பயன்படுது. இதுல செடி, கொடின்னு ரெண்டு வகை இருக்குது. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது. பசியைத் தூண்டி, நா வறட்சியைப் போக்கும். இயற்கையாகக் கிடைக்கும் விட்டமின் சி, இதுல நிறைய உண்டு. அதுமட்டுமில்லாம,

 

இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் இருக்கு.

வெயில் காலங்கள்ல வெளியில சென்று வந்ததுமே பலருக்கு தலைவலி வந்துடும். எலுமிச்சம் பழத்தோட தோலை நல்லா காயவச்சு, பவுடர் போல அரைச்சு வச்சுக்கணும். தலைவலி வரும்போது இந்தப் பவுடரை தண்ணீர்ல கரைச்சி, வலிக்குற இடங்கள்ல தடவணும். இந்தப் பசை உலரும்போது தலைவலி காணாமப் போயிடும்.

கோடைகாலத்துல வர்ற வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளுக்கு நல்ல மருந்து எலுமிச்சை. எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைச்சு தடவ, வியர்க்குருவும், வேனல் கட்டியும் சரியாகும். வெயில் நாட்கள்ல ஒழுங்கா தண்ணீர் குடிக்காம இருந்தா நீர்ச்சுருக்கு ஏற்படும். பயங்கரமா எரிச்சல் ஏற்பட்டு, கடுக்கும். குறிப்பா, குழந்தைங்க இந்த மாதிரி அதிகமா அவதிப்படுவாங்க. அந்த சமயத்துல எலுமிச்சை விதைகளை பசை போல அரைச்சி, தொப்புளைச் சுற்றி தடவணும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்துல குளிர்ச்சியான தண்ணீரை ஊற்றினா, உடனே எரிச்சல் அடங்கும்

எலுமிச்சை பழம், எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு, எலுமிச்சை அளவு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...