அப்னிபார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் அல்ல

ஜம்முகாஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் அல்டாஃப் புகாரி ‘அப்னிபார்ட்டி’ என்ற புதியக்கட்சியைத் தொடங்கியதையடுத்து அது பாஜகவின் ‘பி’ டீம்தானே என்ற கேள்வி எழுந்ததையடுத்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் அதனை மறுத்துள்ளார்.

“காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகளுக்கான அவர்களின் ஆசையின் விளைவே அப்னிபார்ட்டி கட்சியாகும். பாஜகவைப் பொறுத்தவரை காஷ்மீரில் இயல்பான அரசியல் நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்பதே. ஆனால் எங்கள் காலடித் தடங்களை அங்கு விரிவுபடுத்துவதிலும் எங்கள்கவனம் எப்போதும் இருக்கும். எனவே புகாரியின் புதுக்கட்சியின் எதிர்காலம் குறித்து நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை.

ஆகவே அப்னிபார்ட்டி என்பது பாஜகவின் பி டீம் அல்ல” என்று ராம்மாதவ் மறுத்தார்.

மேலும் மேற்கு வங்கம் அரசியல் நிலவரம் குறித்து பாஜ., தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2021ம் ஆண்டு நடக்கும் மேற்கு வங்க சட்ட சபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசை தோற்கடித்து பாஜ., அரசு அமையும். அங்கு, கட்சியைபலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜ., மூத்த தலைவர்கள் கூடுதல்நேரத்தை செலவிட உள்ளனர். ஓராண்டில் வெற்றிபெறும் நிலையில் இருப்போம்.

அதேபோல் அசாமில் பாஜ., தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்குவரும். நாங்கள் (பாஜ.,) சமீபத்தில் திப்ருகரில் ஒருபெரிய பேரணியை ஏற்பாடு செய்தோம். அதில், அசாம்மக்கள் மனதில் குடியுரிமை திருத்தசட்டம் (சிஏஏ) பற்றிய எந்த குழப்பமும் அவர்களிடம் இல்லை. நாட்டில் காங்., தவறான பிரசாரம் செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...