நடுத்தர வர்க்கத்தினருக்கும்  மிகப் பெரிய ஆறுதல்

முழு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் தரும்வகையில், மூன்று மாதங்களுக்கான தவணைகள் ஒத்தி வைக்கப் படுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குறைத்துள்ளது. ‘சிபில்’ மதிப்பீட்டில், இந்தசலுகைகள் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.

உலகளவில், கொரோனா வைரஸ் பரவிவருவதால், நம் நாட்டில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. கடந்த சிலமாதங்களாக, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையில், இந்த ஊரடங்கால், பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு, உணவு தானியங்கள், பணப்பயன், சமையல் எரிவாயு உள்ளிட்டவை, இலவசமாக வழங்கும் வகையில், மத்தியஅரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில்.  நடுத்தர வர்க்கத்தினருக்கும்  மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வ ங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியதாவது:மக்கள், வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்துவகை கடன்களுக்குமான தவணையைச் செலுத்துவதில், மூன்றுமாதம் விலக்கு அளிக்கப்படுகிறது.அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் செலுத்தவேண்டிய தவணைகளைக் கட்ட வேண்டாம்; அவை ஒத்தி வைக்கப்படுகின்றன. இதைச்செயல்படுத்த, அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன், வாகனகடன் உட்பட அனைத்து வகையான, இ.எம்.ஐ.,களுக்கும் இதுபொருந்தும். இது, வாராக் கடனாகவும் கருதப்படாது என்பதால், சிபில் தர வரிசையில், குறைத்து மதிப்பிடப்படாது.

‘ரெப்போ’ எனப்படும், வங்கிகளுக்கு, ரிசர்வ்வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம், 75 அடிப்படை புள்ளிகளை குறைக்க, முடிவு செய்யபட்டுள்ளது. அதன்படி, கடனுக்கான வட்டி, 5.15 சதவீதத்திலிருந்து. 4.40 சதவீதமாக குறைகிறது. இதனால், பொதுமக்களின் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன் களுக்கான வட்டிவிகிதம் குறையும்.

கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு, மிகப்பெரிய வட்டி குறைப்பு இது. கடந்த, 2009ல், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, வட்டிவிகிதம், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 2004க்கு பின், மிகக்குறைந்த வட்டி விகிதம் இது.

இதைத் தவிர, ‘ரிவர்ஸ் ரெப்போ’ எனப்படும், வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செலுத்தும் தொகைக்கான வட்டியும், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள், பணத்தை ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்வதை விட, அதிககடன்களை வழங்க ஊக்குவிக்கப்படும்.

மேலும், சி.ஆர்.ஆர்., எனப்படும், வங்கிகள் வைத்திருக்கக் கூடிய ரொக்கஇருப்பு விகிதம், 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வங்கிகளிடம் உள்ள கூடுதல்ரொக்க இருப்பான, 1.37 லட்சம் கோடி ரூபாய், புழக்கத்துக்கு வரும். அது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளால், 3.74 லட்சம்கோடி , புழக்கத்துக்கு வரும். 2008 – 09ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது இருந்ததைவிட, நம் பொருளாதாரத்தின் அடிப்படைகள், தற்போது மிகவும் வலுவானதாகவும், சிறப்பாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...