நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட்

நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு பயனளிக்கும் விதமாக, மத்தியநிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்த மத்திய பட்ஜெட் 2023-24–ல் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வழங்கியுள்ளார். தள்ளுபடி, வரி அமைப்பில் மாற்றம், புதியவரிவிதிப்பு நடைமுறையில் வரிவிலக்கு நீட்டிப்பு, அதிக கூடுதல் வரிவிகிதத்தை குறைத்தல்,
அரசுத்துறை நிறுவனங்களை சாராதவர்கள் பெறும்விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரம்பு நீட்டிப்பு போன்றவைகள் தொடர்பான அறிவிப்புகள் உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு கணிசமான முறையில் பயனளிக்கும் வகையில் இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

மத்திய அமைச்சரின் முதல் அறிவிப்பில், புதிய வரிவிதிப்பு நடைமுறையில் 7 இலட்சம் ரூபாய் வரை தள்ளுபடி வரம்பை உயர்த்தியிருப்பது முன் மொழியப்பட்டது. அதாவது, புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 7 இலட்சம் ரூபாய் வரை வரிக்கட்ட தேவையில்லை. தற்போது பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு நடைமுறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 5 ரூபாய் இலட்சம் வரை வரிக்கட்ட தேவையில்லாத நிலை உள்ளது.

மேலும் இந்தப் புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரிக் கட்டுபவர்களுக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது. 9 இலட்சம் ரூபாய் ஆண்டு வருமானம்கொண்ட தனிநபர் 45,000 ரூபாய் வரி கட்டினால் போதும். இது அந்த தனிநபரின் வருமானத்தில் 5 சதவீதம் ஆகும். அந்த தனிநபர் இதுவரையில் அவருடைய வருமானத்தில் 25 சதவீதமான 60,000 ரூபாய் வரி செலுத்தி வருகிறார். அதே போல் ஆண்டு வருமானம் 15 இலட்சம் ரூபாய் பெறும் தனிநபர் 1.5 இலட்சம் ரூபாய் வரியாக கட்டினால் போதும். அது அவருடைய வருமானத்தில் 10 சதவீதமே ஆகும். இதுவரையில் தனிநபர் வரியாக 1,87,500 ரூபாய் கட்டி வருகிறார். தற்போதைய வரிவிகிதத்தில் 20 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முக்கிய அறிவிப்பு, சம்பளம் பெறுபவர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப் பெரிய அளவிலான ஆறுதல் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு வருமானம் 15.5 இலட்சம் ரூபாய் அல்லது கூடுதல் சம்பளமாக பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரையில் நன்மை தரும்.

மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தொடர்பான நான்காவது முக்கிய அறிவிப்பில், ஆண்டுவருமானம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள தனிநபர்களுக்கான அதிககூடுதல் வரிவிகிதாசாரத்தைக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது முக்கியஅறிவிப்பின் கீழ் விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் வரிவிலக்கு வரம்பை நீட்டிப்பு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசுசாரா நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு நிகராக விடுப்புத் தொடர்பான பணமாக்குதல் ஓய்வு பெறும்போது 25 இலட்சம் ரூபாய் வரையில் வரிவிலக்குபெற முடியும். இதுவரையில்.3 இலட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...