தியானமும், பிரார்த்தனையும்

 தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் குறித்து விடுக்கப்படும் கோரிக்கை பிரார்த்தனை எனப்படும்.

 

குறுகிய நோக்கமில்லாது பரந்த நோக்கத்துடன் பிரார்த்தனை செய்யலாம். ஆனால், அந்நிலையில் மனமும் இறைவனும் வேறுபட்டு நிற்கும். இறைவனுக்கு எதிரில் மனம் நின்று வேண்டுவது மட்டுமே இருக்கும். தியான நிலையில் மனம் இறைவனிடம் ஒன்றி ஆன்மாவுடன் கலந்து விடுகிறது. தியானத்தில் வெற்றி கண்ட பின்பு மனம் புலன்களின் வழி திரும்பாது. பிரார்த்தனையில் வேண்டுதல் நேரம் போக, மற்ற நேரங்களில் மனம் தன்னிலையில் வேற்பட்டிருக்கும். பிரார்த்தனையில் இறைவனையும் வேராகக் கருதி, உணர்ச்சி பூர்வமாகத் துதி செய்து வேண்டுவது உண்டு. தியானம் என்பது உடல், மன நோய்களுக்கும் மருந்து. சமுதாயத்திற்குச் செல்வம் போன்றது.

மன ஒருமைப்பாடு வேறு; தியானம் வேறு. ஏதேனும் ஒருபொருளில் மனம் ஈடுபட்டு அகலாதிருப்பது ஒருமைப்பாடு. அது நல்லதாகவும் இருக்கலாம். தீயவையாகவும் இருக்கலாம். வெளியுலகப் பொருட்களாகவும் இருக்கலாம். இரு இலக்கை நோக்கி வேடன் அம்பு எய்துவதற்கு இணையானது, ஒருமைப்பாடு. தியானம் அந்நிலையை விடச் சிறந்தது. வெளிப்பொருள்களை நோக்கி, உள்முகமாக மனம் செல்வது தியானம். மனதின் மூலம் ஆன்மா தன்னைத்தானே உணர்ந்து கொள்வது தியானம்.

குழந்தை மீரா தன் தாத்தாவைப் பார்த்து, பிரார்த்தனை என்றால் என்ன? தியானம் என்றால் என்ன? என்று கேட்டது. இந்த இரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக, அழகாக எடுத்துக் கூறினார் அந்த தாத்தா.

"நாம் கடவுளுடன் பேசுவது பிரார்த்தனை. கடவுள் நம்முடன் உரையாடுவது தியானம்". நாம் இறைவனுடன் வலியப் பொய் உரையாடுவதில் பிணைப்பு அவ்வளவாக உறுதியாக இருக்காது. ஏனென்றால், பல விஷயங்களில் ஈடுபட்ட மனம் அவ்வளவு எளிதில் அவற்றை உதறிவிடாது. இறைவனே நம்மை தன் பக்கம் அழைத்துக் கொள்ளும் போது, உலக ஸம்ஸ்காரங்கலாகிய தளைகள் தாமாகவே அகன்று விடுகின்றன.

நன்றி : பானுகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...