டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மசூதி ஒன்றில் தங்கிஇருந்த வெளிநாட்டவர் உட்பட 300 பேர் கொரோனா பரிசோதனைகளுக்காக அதிரடியாக மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதி போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியானது தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமானது. இங்கு மதகூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் இருந்து நூற்று கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்படி அடுத்தடுத்து கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் பெரும்பாலும் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்றகூட்டத்தில் பங்கேற்றவர்களுக்குத்தான் என தெரியவந்தது. இந்தநிலையில் தமிழ்நாட்டிலும் குறிப்பாக ஈரோடு பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து இன்று டெல்லி அதிகாரிகள் இம்மசூதியை முற்றுகையிட்டு அதிரடிசோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மசூதியில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கொரோனா பரிசோதனைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் பலர் தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். தற்போது இந்தபகுதி சீல் வைக்கப்பட்டு போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கும் டெல்லிநிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லிமசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திரும்பிய 23 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் அனைவருக்கும் நாளை மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |