மஹா கும்பமேளாவில் புனித நீராடிய அமித்ஷா

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது.

இது, அடுத்த மாதம் 26ம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர்.

இதுவரை, 13.21 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், மஹா கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டு உள்ளதாக உ.பி., அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தன் குடும்பத்தினருடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, தீர்த்தராஜ் பிரயாக் பகுதியில் துறவியருடன் இணைந்து திரிவேணி சங்கமத்தில் அமித் ஷா புனித நீராடி வழிபட்டார். அதன்பின், அங்குள்ள படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தார். இதையடுத்து, தன் குடும்பத்தினருடன் துறவியரை சந்தித்து ஆசி பெற்றார்.

பிரயாக்ராஜ் வரும் முன், சமூக வலைதளத்தில் அமித் ஷா கூறுகையில், ‘மஹா கும்பமேளா என்பது சனாதான கலாசார தத்துவத்தின் தனித்துவ அடையாளமாக விளங்குகிறது. கும்பமேளா, நம் வாழ்வின் தத்துவ நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது’ என, குறிப்பிட்டுள்ளார்.

மஹா கும்பமேளாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், யோகா குரு பாபா ராம்தேவ், பா.ஜ., மூத்த தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...