இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணம்

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலிகாட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமர் மோடி அதில் கூறியதாவது;-

*மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்
* ஊரடங்கை மதித்துநடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலகநாடுகள் பின்பற்றி வருகின்றன.
* இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது

*நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகபோராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
*வீட்டில் இருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தமுடியும்.

*நாம் தனி ஆட்கள் இல்லை 130 கோடி மக்களுடன் இணைந்துள்ளோம்
*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத் தக்கது.
*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டுவர வேண்டும்.
*கொரோனா வைரசை கட்டுப்படுத்த நிரந்தரதீர்வை நோக்கி நாம் செல்லவேண்டும்
*வீட்டில் இருக்கும் அனைவரும் இறைவனின் வடிவம்.
*வரும் ஞாயிற்று கிழமை கொரோனாவுக்கு எதிராக நாட்டுமக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும்

*வரும் ஏப்.5ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின் மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்
*ஏப்.5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி, செல்போன் விளக்குகளை ஒளிரவிட வேண்டும்.
* சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் – ஒன்று கூடிவிளக்கு ஏற்ற கூடாது.
* நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.
* அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...