மஹா கும்பமேளாவின் வெற்றி அனைவருக்கும் பங்கு ; பிரதமர் மோடி உரை

மஹா கும்பமேளாவின் வெற்றியில் அனைவருடைய பங்கும் அடங்கி இருக்கிறது என லோக்சபாவில் பிரதமர் மோடி பேசினார்.

மஹா கும்பமேளா நிகழ்ச்சி குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவின் வெற்றிக்கு பங்களித்த கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியில் அனைவரின் பங்கும் அடங்கி இருக்கிறது. அரசு, சமுதாயம், மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என அனைவரின் பங்கும் உள்ளது.

கங்கா தேவியை பூமிக்கு கொண்டு வருவதற்கு பகீரத மன்னன் முயற்சி மேற்கொண்டது நாம் எல்லோருக்கும் நன்கு தெரியும். மிகப்பெரிய இலக்குகளை நோக்கிய தேசிய நலனின் அடையாளமாக மஹா கும்பமேளா விளங்கியது. நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக மஹா கும்பமேளா நடைபெற்றது. உத்தர பிரதேச மக்கள் மற்றும் பிரயாக்ராஜ் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கடந்தாண்டு அயோத்தியில் ராமரின் பிரம்மாண்ட பிரதிஷ்டை நடைபெற்றது. நமது திறன்கள் குறித்து மக்கள் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு மஹா கும்பமேளா பதில் அளித்துள்ளது. மஹா கும்பமேளாவின் பிரம்மாண்ட அற்புதத்திற்கு ஒட்டுமொத்த உலகமும் சாட்சியாக விளங்குகிறது. அடுத்த தலைமுறைக்கு இந்த கும்பமேளா ஒரு பெரும் உதாரணமாக திகழும். அது தேசத்திற்கு புதிய திசையும் வழங்கி உள்ளது.

உயர்ந்து வரும் இந்தியாவின் உணர்வுகளை மஹா கும்பமேளா பிரதிபலித்தது. இந்தியாவின் புதிய தலைமுறை, பாரம்பரியங்களையும், நம்பிக்கையையும் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவின் மகத்துவத்தை கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் பார்த்தது. ஒரு தேசிய உணர்வை கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது பலத்தை சந்தேகிப்பவர்களுக்கு பதிலடியை கொடுத்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...