7 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள பாஜக முதல்வர் முடிவு….

காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரானுக்கு கொரோனா உறுதியானதையடுத்து 7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக்கொள்ள குஜராத் முதல்வர் விஜய்ரூபானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தற்போது வரை கொரோனா வைரஸால் 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், 28 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காதியா-ஜமால்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இம்ரான் கெடவாலா.

இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் ரூபானியை காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தகூட்டத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பின்னர், அடுத்த சிலமணி நேரங்களிலேயே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில் கொரோனா சோதனைசெய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வருடனான ஆலோசனை மற்றும்  செய்தியாளர்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் தனிமனித விலகல் கடைப்பிடிக்கப்பட்டாலும் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து,  7 நாள் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொள்ள குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முடிவு செய்துள்ளார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...