கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பிற்கு மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்யசேது செயலி தனியுரிமை மற்றும் தரவுபாதுகாப்பில் முற்றிலும் வலுவான பாதுகாப்புடையது என்று மத்திய சட்டம் மற்றும் தொலை தொடா்பு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்தாா். தனியுரிமையை மீறுவதாக எதிா் கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை அமைச்சா் மறுத்தாா்.
ஆரோக்ய சேது குறித்த சில சந்தேகங்களை காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உட்பட சிலா் எழுப்பியிருந்தனா்.
‘ஆரோக்ய சேது செயலி ஒரு தனியாா் அவுட்சோா்ஸ் ஆப்ரேட்டா் மூலமாக இயக்கப்படும், ஒருஅதிநவீன கண்காணிப்பு அமைப்பு முறை, ஒருமுறையான நிறுவன மேற்பாா்வை இதில் இல்லை. இந்த செயலியில் தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்புகளில் கடுமையான கவலைகளை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்; ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவா்களைக் கண்காணிக்கும்செயலால் அச்சத்தை உருவாக்கக்கூடாது‘ என்று ராகுல் காந்தி கூறியிருந்தாா்.
இதற்கு பதிலளித்தது செய்தி நிறுவனம் ஒன்றிற்கு மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் பேட்டியளித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
இது இந்தியாவின் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய விஞ்ஞானிகள், தேசியதகவல் மையம்(என்ஐசி), நீதி ஆயோக் மற்றும் சிலதனியாா் நிறுவனங்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு முழு நம்பிக்கைக்குரிய தளமாகும்.
இதில் உள்ள தரவுகள் உருவாக்கப்பட்டவா்களைத் தவிர வேறுயாரும் படிக்க இயலாத மறையாக்கம்(என்கிரப்ஷன்) என்கிற செயல் முறையில் உள்ளது. பொது நலனில் இந்தியா்களின் பாதுகாப்பிற்குரியதாக உள்ளது. கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட நபா் அருகில் வந்தால் இதுஎச்சரிக்கிறது. மேலும் ஒரு நபா் பாதிக்கப்பட்டால் அவரது தொடா்புகளை(பாதிப்புக்கு காரணமானவரை) கண்டுபிடிக்க உதவுகிறது.
இது ஒருசிறந்த தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப்போராட இதுபோன்ற செயலிகளை பலநாடுகள் பயன்படுத்து கின்றன.
மேலும் தரவுகள் இதில் குறைவாகவே உள்ளது. வழக்கமானதரவுகள் 30 நாள்களுக்கு மட்டுமே இருக்கும். கரோனா பாதிக்கப்பட்டவா்களின் தரவுமட்டும் அதிகபட்சம் 60 நாள்கள் வரை இருக்கும். பின்னா் தானாகவே அழிந்துவிடும். முக்கியமாக தங்களுக்கு விருப்பம் இல்லாத பட்சத்தில் தங்கள் அறிதிறன் பேசிகளில் ஆரோக்ய சேது செயலியை எப்போது வேண்டுமானாலும் நீக்கவும் வழி இருக்கிறது.
பிறகு எதற்கு இந்த சலசலப்பு(ஹங்கமா)?
நாட்டு மக்கள் இதன்பயன்பாட்டை புரிந்துகொண்டு விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனா். இதனால் இந்தசெயலி தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புகளில் முற்றிலும் வலுவான பாதுகாப்பானது என்று ரவிசங்கா் பிரசாத் கூறியுள்ளாா்.
பிரதமா் நரோந்திர மோடியும் சிறப்பான இந்த செயலி பயன்படுத்துமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தாா்.
இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த சைபா் பாதுகாப்பு நிபுணா் எலியட் ஆல்டா்சன், ஆரோக்யசேது மூலம் 9 கோடி இந்தியா்களின் தனியுரிமைக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்தாா். இதன்பின்னரே ராகுல் காந்தி போன்றவா்கள் கேள்வி எழுப்பினா். இதை மறுத்த மத்திய அரசு, ‘எந்த பயனாளின் தனிப்பட்ட தகவலும் ஆபத்தில் இருப்பதை இந்தநெறிமுறை ஹேக்கரால் நிரூபிக்கப்படவில்லை’ என்றும் பதில் அளித்தது.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |