1.4 லட்சம் பேருக்கு ரயில்வேயில் புதிய பணி வாய்ப்புகள்

கடந்த 2014 முதல் 2022 வரையிலான எட்டு ஆண்டுகளில், இந்திய ரயில்வேயில் 3,50,204 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பட்டிருப்பதாகவும், மேலும் 1.4 லட்சம் பேருக்கு விரைவில் பணி வழங்கப்படும் என்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்விநேரத்தின் போது உறுப்பினா் ஒருவரின் கேள்விக்கு எழுத்து வடிவில் அமைச்சா் பதிலளித்ததாவது:

நாட்டில் வேலைவாய்ப்பை அளிப்பதில் இந்திய ரயில்வே முதன்மை வகிக்கிறது. 2014 முதல் 2022 வரை, ரயில்வே துறையில் 3,50,204 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை 2023 ஆண்டுறுதிக்குள் உருவாக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். அதில் ரயில்வேதுறையின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும். 1.40 லட்சம் வேலை வாய்ப்புகளை ரயில்வேதுறை அளிக்கும். அதற்கான ஆள் தோ்வுப்பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு இதுவரை 18,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வே மிகப்பெரிய நிறுவனமாகும். பணி ஓய்வு, பணி விலகல், ஊழியா்மரணம் போன்ற காரணங்களால் இத்துறையில் காலிபணியிடங்கள் உருவாகின்றன. இவற்றை நிரப்புவது வழக்கமான நடைமுறைப்படி தொடா்கிறது. ரயில்வே துறையின் புதியதேவைகளை உத்தேசித்து பணியாளா் தோ்வு முகமைகளாலும் புதியபணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 10,189 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தற்போது 1,59,062 பேரைத் தோ்வு செய்யும்பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தவழக்கமான நிரந்தர பணி நியமனங்கள் மட்டுமல்லாது, அயல்பணி ஒப்பந்தமுறையிலும் வேலை வாய்ப்புகள் ரயில்வேயில் அளிக்கப்படுகின்றன என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.