புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்

இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். லாக்டவுன் தொடங்கியதி லிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்தமாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் அது  கூறியதாவது: ”2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதிலும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு மே 1-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் இருந்து சென்றுள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தமாநிலம் செல்ல மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஷ்ராமிக் ரயில்கள் மூலம் இது வரை 35 லட்சம் பேர் சொந்த மாநிலம் சென்றுள்ளனர். பேருந்துகள் மூலம் 40 லட்சம்பேர் சென்றுள்ளனர்.

கடந்த மார்ச் 27-ம் தேதி மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியதில், புலம்பெயர் தொழிலாளர்களை மிகவும் கனிவுடன் அணுக வேண்டும். அவர்களை லாக்டவுன் காலத்தில் நடந்துசெல்ல அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு உணவும், தங்குமிடமும் வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக மாநிலங்களுக்காக பேரிடர்மேலாண்மை நிதியிலிருந்து ரூ.11,092 கோடியை மத்திய அரசு விடுவித்தது. புலம் பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைவத்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையையும் மத்திய அரசு தொடங்கி, அதை இணைச் செயலாளர் அளவிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதே போல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுவருகிறது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் புரியும் வகையிலும், அறியுமாறு அவர்களுக்காக மாநில அரசும், மத்திய அரசும் செய்துள்ள வசதிகள், உதவிகள் குறித்து மாநில அரசுகள் விளம்பரம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களை லாரி, டிரக் போன்றவற்றில் அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு, ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் மாநிலங்களுக்குள் ரயில்கள் மூலம் செல்லலாம் என்றும், மே 1-ம் தேதி முதல் மாநிலம் வி்ட்டு மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டது”.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...