அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருங்கள்

அவசரக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஒரேநாளில் 11,458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மிக மிக அதிக எண்ணிக்கையில் தொற்றுதினமும் அதிகரித்து வருவதால் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,08,993 ஆக இந்தியாவில் உயர்ந்து உள்ளது என்று சுகாதாரஅமைச்சின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோவால் இது வரை 8,928 பேர் உயிரிழந்துள்ளனர். 1,46,880 பேர் நாடுமுழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கோவிட் -19 என்ற கொரோனா தொற்று நோய்க்கு எதிராக நாட்டில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மறு ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்தார் என்று மத்தியஅரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கொரோனா வைரஸ்தொற்றுகள் அதிகரித்து வரும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிலைமை குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளுடன் விவாதித்தார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் என்.ஐ.டி.ஐ ஆயோக் உறுப்பினரும் மருத்துவ அவசர நிலை மேலாண்மை திட்டத்தின் கன்வீனருமான வினோத்பால் கொரோனா பாதிப்பு குறித்து விவரித்துள்ளார். மூன்றில் இரண்டுபங்கு ஐந்து மாநிலங்களில் உள்ளது எனறும் பெரிய நகரங்களில் அதிக எண்ணிக் கையிலான கொரோனா இருப்பதையும் விவரித்துள்ளார்.

அப்போது, நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவமனை மற்றும் தனிமை படுத்தப்பட்ட படுக்கைகளின் தேவைகள் குறித்து அரசின் குழுவின் பரிந்துரைகளை பிரதமர் மோடி கவனத்தில் எடுத்துக்கொண்டார், மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதரத் துறையுடன் கலந்தாலோசித்து அவசரகால திட்டங்களை செய்யுமாறும் சுகாதார அமைச்சக அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பருவமழை நெருங்கிவருவதால் முறையான தயாரிப்பை உறுதிசெய்யுமாறு சுகாதார அமைச்சகத்தை பிரதமர் மோடி கூட்டத்தில் கேட்டுக் கொண்டார். டெல்லியில் கொரோனா பரவும் நிலைமை பற்றி விவாதிக்கப் பட்டது மற்றும் இரண்டு மாதங்களுக்கான கணிப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி லெப்டினன்ட் கவர்னர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து மூத்த அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தவேண்டும் என்று பிரதமர் மோடி பரிந்துரைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூல ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம் 'தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தா ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசு -பிரதமர் மோடி சாடல் '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை க ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை கேள்வி உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...