இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் கரோனா தடுப்பூசிதிட்டம் தொடங்கப்பட்டது. அப்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மட்டும் பயன் பாட்டில் இருந்தன.
கடந்த சிலமாதங்களாக தடுப்பூசி திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் தீவிரப்படுத்திவருகின்றன. உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் நாட்டில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தற்போது நாள்தோறும் சராசரியாக 40 லட்சம் பேர் முதல் 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
இந்த சூழலில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், ‘‘நாடுமுழுவதும் ஒரே நாளில் 49,55,138பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 50,10,09,609கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியிருப்பது கரோனாவுக்கு எதிரான போரில் புதிய உத்வேகம் அளிக்கிறது. அனைத்து குடிமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் மிக அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 5.32 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப் பட்டிருக்கிறது. மகா ராஷ்டிராவில் 4.63 கோடி, குஜராத்தில் 3.56 கோடி, ராஜஸ்தானில் 3.46 கோடி, மத்திய பிரதேசத்தில் 3.42 கோடி, கர்நாடகாவில் 3.23 கோடி, மேற்குவங்கத்தில் 3.17 கோடி கரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |