நம்மிடம் புல்லாங்குழலும் உள்ளது, அழிக்கும் சுதர்சன சக்கரமும் உள்ளது

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இன்று திடீர்பயணமாக லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், ராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லே வில் உள்ள நிமு பகுதிக்கு சென்றமோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். பிரதமர் வந்தபோது, வீரர்கள், ”வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே” என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

வீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிபேசியதாவது: நமது வீரர்களின் வலிமை இமயத்தைவிட உயர்ந்தது. பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் எல்லையை நமது வீரர்கள் காத்துவருகின்றனர். உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையைவிட உயரமானது .வீரர்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில்தான் உள்ளது. வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும்இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள்தான். உங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

நமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி வருகிறோம். நமதுநிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன். நாடு தற்போது உடைக்கமுடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்திய நாட்டைகாக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன். எதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டின் எதிரிகளுக்கு உரியபாடம் புகட்டியுள்ளீர்கள்.

இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப் படுகிறார்கள். எதிரிகளின் எந்ததிட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை. நமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர். லடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின்சதி, தேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்றமில்லை.சியாச்சின் முதல் கல்வான் உள்ளவரை நமது நமது கட்டுபாட்டில் உள்ளது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால் நம்மை வலுப்படுத் தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கி செல்வது, அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமாக உள்ளவர்கள், அமைதிக்கான நடவடிக்கையை துவங்க மாட்டார்கள். அமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் அச்சம் கொள்ளப்போவதில்லை.

 

ராணுவ வீரர்கள் தீர்க்கம்  அவர்களின் முகத்தில்  தெரிகிறது. கடந்த காலங்களில் பலஎதிரிகளுடன் போரிட்டு வருகிறோம். நமதுவீரம் வழிவழியாக வந்தவரலாறு கொண்டது. இந்திய ராணுவத்தின் நெருப்புபோன்ற ஆக்ரோஷத்தை எதிரிகள் பார்த்துள்ளனர்.

நாடுபிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது. நாடுபிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. ஒவவொரு நாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டும் கவனம்செலுத்தி வருகின்றன. எல்லை பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது முழு வீச்சில் நடக்கும்.அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.

நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள்தான்; அதே சமயம் நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது.அமைதியை விரும்பும் நாம் தேவைபட்டால் எதிரிகளை களத்தில்சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க்க பேராசையுடன் செயல்பட்டோர் எப்போதும் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்

பிரதமர் மோடி தனது பேச்சின் போது,
” மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு.
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.

பொருள் விளக்கம்:

– வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.

தொடர்ந்து பிரதமர் மோடி லே பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு எல்லையில் நடந்த மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களை மோடி சந்தித்து பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...