பயங்கரவாத தாக்குதலுக்கு விரைவில் பதிலடி – ராஜ்நாத் சிங்

ஜம்மு – -காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக, முப்படை தளபதிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திரிவேதி, கடற்படை தலைமை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.கே.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த ராஜ்நாத் சிங், ஜம்மு – -காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், முப்படைகளும் போருக்கு தயாராகும் நிலையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் முப்படைத் தளபதிகளிடம் கூறினார்.

இதன் பிறகு, டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “பஹல்காமில் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மட்டும் எங்கள் இலக்கு கிடையாது. திரைமறைவில் இருந்தபடி, இந்திய மண்ணில், இதுபோன்ற பயங்கரவாத தாக்குதலை செயல்படுத்த சதி செய்தவர்களும் எங்கள் இலக்கு.

”இந்த விஷயத்தில் தேவையான, பொருத்தமான, மிகச் சரியான பதிலடி விரைவில் தரப்படும். பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். பயங்கரவாதத்தை பூஜ்ஜியம் அளவுக்குக் கூட சகித்துக் கொள்ள முடியாது,” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி ...

நாளை கூடுகிறது அனைத்த்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு நாளை (மே 08) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்� ...

பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரை ...

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான� ...

பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ள� ...

இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது: அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் ''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப� ...

பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமருக்கு நன்றி ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...