பிரதமா் நரேந்திர மோடியின் லடாக்பயணத்தை பாராட்டி, வரவேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பிரதமரின் வருகை அங்குள்ள இந்திய ராணுவ வீரா்களின் மனஉறுதியை அதிகரிக்கும் என்று தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அமித் ஷா சுட்டுரையில் வெள்ளிக் கிழமை வெளியிட்ட பதிவில், ‘முன்னின்று தலைமை வகிக்கும் நமது பிரதமா் நரேந்திரமோடி, லடாக் சென்று துணிச்சல் மிக்க நமது ராணுவ, விமானப்படை வீரா்கள் மற்றும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சந்தித்துள்ளாா். நமது பிரதமரின் இந்தப் பயணம் நிச்சயமாக நமது வீரா்களின் மன உறுதியை அதிகரிக்கும்‘ என்று பதிவிட்டுள்ளாா்.
அத்துடன் மோடி லடாக் பயணத்தில் எடுத்த படங்களையும் பதிவிட்டுள்ள அமித் ஷா, ‘மோடிஇன்லாடாக்‘ என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளாா்.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |