பரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்

இந்திய தேசத்தின் பக்தி இலக்கியங்களில் புகழுக்குரிய சக்திமிக்க இறை வடிவம் முருகன். ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும், வணங்கப் படும் முருகனுக்கு நிறைய இலக்கியங்கள் உண்டு.

கந்த புராணம் என்பது, முருகன் வரலாற்றுக் காவியம்.தமிழர்களின் பெருமைக்குரிய கடவுள் முருகன். தமிழ் இலக்கணத்தோடு முருகனைத் தொடர்புபடுத்தி, சான்றோர் மகிழ்வர். முருகனின், 12 கைகள், உயிர் எழுத்து என்றும், கையில் உள்ள வேல் ஆயுத எழுத்து என்றும் கூறுவர். ஆறுமுகங்களும் பன்னிரண்டு விழிகளும் மெய்யெழுத்து பதினெட்டை குறிக்கின்றன என்பது நம்பிக்கை.முருகனின் கொடி சேவல், நெடில் என்றும் முருகனின் வாகனமான மயில், குறில் என்றும் சொல்லபடுகிறது.

தமிழர் இல்வாழ்க்கை மரபுப்படி, தெய்வானை திருமணம் கற்பியலாகவும், வள்ளிதிருமணம் களவியலாகவும் குறிக்கப்படுகிறது.’ஒரு தனிமுருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய’ என்று முருகனின் அருள்மிக்க தன்மையை, கச்சியப்பர் பாடுகிறார். தமிழில் திட்டினால்கூட, முருகன் வாழ வைப்பான் என்ற பொருள் பட, ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்பான்’ என்று, கந்தர் அனுபூதியில் பாடுகிறார்.

கலியுகவரதன் கந்தன் என்ற பொருளில், ஏராளமான இசைப்பாடல்கள் உண்டு.அடியார்களுக்கு முருகன் அருள் செய்பவன் என்பதற்கு, பழங்காலம் முதல், தற்காலம்வரை சான்றுகள் உள்ளன. ‘கற்கிமுகி’ என்ற பூதத்திடம் சிறைப்பட்டோரை, திருமுருகாற்றுப்படை பாடி, நக்கீரர் காப்பற்றினார் என்று ஒரு செய்தி உண்டு.அண்மை நுாற்றாண்டுகளில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகளுக்கு, முழங்காலில் ஏற்பட்ட ஒரு நலிவை, செவிலி உருவத்தில்வந்து, முருகன் ஆற்றிய வரலாறும் உண்டு.சமீபத்தில், 50 ஆண்டுகளுக்கு முன், நிலச் சீர்திருத்த உதவி ஆணையராக இருந்த கவிஞர் ஐயாரப்பன், சைதாப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமிக்கு, ‘தாரீர் ஒளி’ என்ற பதிகம் பாடி, கண்ணொளி பெற்றது உண்மை நிகழ்வே.தமிழில் கந்த புராணம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, கந்தர் அனுபூதி, கந்தசஷ்டி கவசம் ஆகிய பல்வேறு பனுவல்கள், அன்றாட வழிபாட்டில் பயன்படுத்த படுகின்றன.

இவற்றுள், கந்தசஷ்டி கவசம், பிணி நீக்கும் ஸ்தோத்திரம். கந்த சஷ்டி கவசம், சமீபத்தில், ஒருவிவாதப் பொருள் ஆகி இருக்கிறது.தெய்வ வழிபாட்டு இலக்கியத்தில், பிறப்பு உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் இருப்பதாக, ஒருசாராரால் இழிவுபடுத்தப்பட்டது. உறுப்புகளின் பெயர்களை குறிப்பிடுவது இலக்கியங்களில் வழக்கமான ஒன்று.வள்ளுவர்கூட, 1087-ம் குறளில், ‘முலை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

நம் மருத்துவத்துறையில், கண்ணுக்கு ஒரு மருத்துவர்; பல்லுக்கு ஒரு மருத்துவர்; தோலுக்கு ஒரு மருத்துவர்; எலும்புக்கு ஒரு மருத்துவர்; நரம்புக்கு ஒருமருத்துவர் என இருப்பதைப் போல, மனித உறுப்புகளில் எந்த உறுப்புக்கும் நோய் அபாயம் உண்டு.நோய் தீர்க்கும் ஸ்தோத்திரத்தில், கண், கால், கை, நெற்றி, செவி, வாய், கழுத்து, தோள் என்ற உறுப்புகள் போல், பிட்டம், ஆண்குறி, முலை, வட்டக்குதம் ஆகிய உறுப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. கந்தர் சஷ்டிகவசம், எல்லா உறுப்புகளுக்கும் பொதுவானது.

கவசத்தைப் பாராயணம் செய்வோர், எந்தப் பகுதியில் நோயோ, அந்த பகுதியில் உள்ள நோய் தீர்வதற்கான வேண்டுதலை முன்வைக்கின்றனர்; பலர் குணமாகியும் உள்ளனர்.கந்தர் சஷ்டி கவசத்தின், 238 வரிகள், 952 சொற்களில், நான்கு சொற்களை பிரச்னை ஆக்கியது, மதச்சார்பான இலக்கியத்தையும், அதுசார்ந்த மக்களையும் இழிவுபடுத்தி ஆனந்தப்படுவதே தவிர வேறுஒன்றும் இல்லை.கடவுள் என்பது இழிவானால், கடவுள் மறுப்பும் ஒரு இழிவுதான் என்பதை பலர் மறந்து விடுகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன், ஈ.வெ.ரா., துவங்கிய கடவுள் மறுப்பு இயக்கத்தை, ராஜாஜியோ, காமராஜரோ கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.’மத நம்பிக்கைக்கு உலை வைப்பதுதவறு’ என்று யாருமே அவருக்கு எடுத்து சொல்லவில்லை. ஆத்திகர்களும், ஈ.வெ.ரா.,வை எதிரியாகப் பார்த்தனரே தவிர, அவரை அணுகியிருந்தால் பிரச்னை தீர்வாகலாம் என்று சிந்திக்க வில்லை. தீபாவளி சரவெடி வெடித்து ஓய்ந்த பின், சில வினாடிகள் கழித்து, ஓரிரண்டு வெடிகள் தனித்தனியாக வெடிப்பது போல, பழைய விதைகள் அவ்வப்போது முளைக்கின்றன.

கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், குளிர் காய்வதும், அதைப் பலர் ஆதரித்து அறிக்கை வெளியிடுவதும், தமிழகத்தில்தான் நடக்கும். இந்த விதத்தில், ஒரு முன்மாதிரியான மாநிலம் என்ற பெருமைநமக்குண்டு. ஹிந்து அமைப்பாளர்களுக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும், ஒரு வேண்டுகோள். பூனை குறுக்கே வருவது சகுனத்தடை என்பதால், பூனைகளே இருக்கக் கூடாது என்று சொல்ல முடியாது.

பரந்துபட்ட ஹிந்து மதம், பழங்கள் நிறைந்த ஒரு பயன்மரம்; கற்கள் விழத் தான் செய்யும்.நம் மதம், பாரம்பரிய சிறப்புபெற்றது. நுாறு ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்தவ கல்லுாரியின் பேராசிரியராக இருந்த, டாக்டர் மில்லர், ‘கடவுள் எங்கும் நிறைந்து இருப்பவர் என்ற கொள்கை, மற்றமதங்களைக் காட்டிலும், ஹிந்து மதத்தில் தான் தெளிவாக இருக்கிறது’ என்று பாராட்டியுள்ளார். ஆகவே, பாரம்பரிய பெருமை பெற்ற ஒருவலுவான கட்டடமாகிய, ஹிந்து மதத்திற்கு, மழைத் துாறல்களால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது!

நன்றி டாக்டர் வா.மைத்ரேயன்
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,

நன்றி தினமலர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...