தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், எல்.முருகன் கூறியதாவது: தமிழகத்தில் தீண்டாமை இருக்கிறது. 22 ஊராட்சிகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களால் அவர்களின் பணியை செய்ய முடியவில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது.
40 சதவீதம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர். ஹாத்ரஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் ஆறுதல் தெரிவித்தார். ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் நேரில் சந்திக்கவில்லை.
வன்முறை
தமிழகத்தில் தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்முறையை தடுக்க கோரி, தேசிய பட்டியலின ஆணைய தலைவரை தமிழக பா.ஜ., துணை தலைவர் தலையிலான பிரதிநிதிகள் குழு சந்திக்க உள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |