கடந்த மே மாதம் முதல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை நீடித்துவருகிறது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், பிரச்சினையை தீர்க்க சீனா ஒத்துழைப்பதில்லை.
இந்நிலையில், எல்லைப்பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றதயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதையை கடைப் பிடிப்பதுதான் சரியானவழி என்று சீனா தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியாவின் 74ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லைவரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் குறிவைப்போருக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நமதுபாதுகாப்பு படையினர் பதில் அளித்துள்ளனர்.
இந்தியாவின் ஒருமைப்பாடே நமக்கு உச்சபட்சமாக முக்கியம். நம்மால் என்ன செய்யமுடியும், நமது ராணுவ வீரர்களால் என்ன செய்யமுடியும் என்பதை லடாக்கில் அனைவருமே பார்த்து விட்டனர்” என்று தெரிவித்தார். ஜூன் 15ஆம் தேதியன்று லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினர் மோதிக்கொண்டதில் 20 இந்தியவீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷோலிஜியான் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டைநாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இருநாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.
நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்ட கால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |