அருண் ஜெட்லியின் நினைவுதினமான இன்று ”எனது நண்பரின் இழப்புக்காக துயர் அடைகிறேன்” என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சரான அருண்ஜெட்லியின் நினைவு நாளான இன்று, தனது வருத்தத்தை பகிர்ந்திருக்கும் பிரதமர் , அருண்ஜெட்லி குறித்து அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய உரையையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்திருப்பதுடன், எனதுநண்பரின் இழப்பால் வாடுகிறேன். இந்தியாவுக்கு மிகுந்த ஊக்கத்துடன் சேவையாற்றிய அவர், நுண்ணறிவாளர், சிறந்தபண்பாளர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு தங்களின் மரியாதையைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் பாஜக அடுத்தடுத்து முக்கிய தலைவர்களை இழந்தது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைந்தார். உடல்நிலை குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்த அருண் ஜெட்லி, அடுத்த மூன்று வாரங்களில் உடல் உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |