வாக்குறுதியை நிறைவேற்றியவர் வாஜ்பாய் – சம்பாய் சோரன் புகழாரம்

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு அமையாமல் இருந்திருந்தால், ஜார்க்கண்டில் மக்கள் நீண்ட காலம் போராட வேண்டி இருந்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கூறினார்.

இன்று மறைந்த வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழாவில், அவருக்கு பா.ஜ., தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மத்தியில் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படாமலிருந்திருந்தால், மாநில மக்கள் இன்னும் பல ஆண்டுகள் காத்திருந்து போராட வேண்டியிருக்கும். மேலும் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

பிரிக்கப்படாத பீகாரின் ஆர்.ஜே.டி., அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தனி ஜார்கண்ட் உருவாக்கும் வாக்குறுதியை முன்னாள் பிரதமர் நிறைவேற்றினார்.

1999ம் ஆண்டு தும்காவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அடல்ஜி, ‘எனது ஆட்சி அமைக்க உதவினால், தனி மாநிலத்தை பரிசளிப்பேன்’ என்று உறுதியளித்தார். மேலும் ஜார்க்கண்ட் மக்களின் பல தசாப்த கால இயக்கத்தை கவுரவித்தார்.

இவ்வாறு சம்பாய் சோரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...