வசம்பு என்னும் அறிய மருந்து

 சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் பொருளாகும். அதிலும் குறிப்பாக 'பச்சைப்பிள்ளைகள்' இருக்கும் வீட்டில் ஐந்தரைப் பெட்டியில் கட்டாயமாக இருக்க வேண்டிய முக்கிய மருந்துப் பொருளாகும்.

பச்சைப் பிள்ளைகள் திடீர் திடீரென்று அழும். வயிற்று வலியாக இருந்தாலும் அழும். வாயுப் பொருமலினாலும் அழும், உடனே இந்த வசம்பை ஆமணக்கெண்ணையில் முக்கிச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வெந்நீரில் கலந்து கொடுத்தால் போதும், குணம் கிடைக்கும்.

சரியாகச் ஜீரணமாகாமல் குழந்தை வாந்தி எடுத்தாலோ, மாந்தத்தினால் வயிறு உப்பி இருந்தாலோ என்னவென்று கூற முடியாத பச்சைக் குழந்தைகள் விட்டுவிட்டு அழுதாலோ வசம்பை மருந்தாகக் கொடுத்தால் போதும். அழுகையை நிறுத்தி விடும்.

புத்தம் புதிய தேனிலும் கலந்து கொடுக்கலாம். இவ்விதம் தொடர்ந்து கொடுத்து வர விக்கல், மூச்சுத் திணறல், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் இவை குணமாகும்.

பேதியைக் கட்டுப்படுத்தவும் வசம்பு நல்ல மருந்தாகும். குழந்தைகள் உள்ள வீட்டில் எப்போதும் வசம்பு இருக்க வேண்டும். மண்சட்டியில், வசம்பை இடித்துத் தூளாக்கி அதிலிட்டுப் போதிய அளவு நீர்விட்டு அவ்விதமே மூடி வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறி இருக்கும் காலை வேளையில் இந்த நீரை வடித்துக் கொடுக்க பேதியை நிறுத்திவிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கு வசம்பு நல்ல மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் இது நல்ல மருந்தாகும். வசம்பை இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு ஓர் தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தினமும் குடித்து வர ஒருவாரத்தில் குணம் கிடைக்கும். எனவே, நரம்புத்தளற்ச்சியால் துன்பமடைபவர்கள் நம்பிக்கையுடன் இந்த மூலிகையைக் கையாண்டால் போதும் குணம் கிடைக்கும்.

வசம்பு, கறிமஞ்சள், ஏலரிசி இவை ஒவ்வொன்றையும் 15 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவைகள் அனைத்தையும் ஓரிரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் மறுநாள் காலையில் அம்மியில் வைத்துப் போதிய தேங்காய்ப்பால் விட்டு நன்கு அரைக்க வேண்டும்.

அதன்பின்னர் இந்த விழுதை ஏறக்குறைய அரை லிட்டர் அளவு தேங்காய் எண்ணையில் கலந்து சிறு தீ எரித்துப் பக்குவமாமக் காய்ச்சி எடுக்க வேண்டும். எண்ணெய் முருகிவிடக்கூடாது.

இந்தத் தைலத்தைச் சொறி, சிரங்கு, மற்றும் படும்புண்களின் மீது கோழி இறகால் தொட்டுப் போடக் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி; தே.ஜ., ...

''தமிழகத்தில் நிச்சயம் தே.ஜ, கூட்டணி வெற்றி பெறும். கூட்டணி ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் ப ...

இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை பார்வைக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை துல்லியமாக தாக்கி ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : ...

51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை : இன்று மோடி வழங்குகிறார் பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர ...

சீனா செல்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் : 5 ஆண்டுகளில் இது முதல்முறை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீனா செல்ல உள்ளதாக ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வ ...

75 வயது ஒய்வு ஊடகங்கள் பரப்பும் வதந்தி ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத், சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்ட ...

பக்தையாகவே சென்றேன் பலம் காட்டினார் பெருந்தகை என் அப்பன் முருகன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...