இந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது!

உலகத்தின் இப்போதைய ஒரேயொரு கிருமினல் சைனாதான்! இந்த சைனாக்காரனுக்கு முன்பு ஒரு கிருமினல் உலகத்தில் செயல்பட்டான் அவன் பிரிட்டீஸ் காரன்! நல்லவன்போல் நடிப்பான் வியாபாரம்போல் சொல்வான், ஆனால் அது திருட்டு திட்டமாக இருக்கும்! பிரிட்டீஸ்காரனும் இதைத்தான் செய்தான் இப்போது சைனாக்காரனும் இதைத்தான் செய்கிறான்!

பிரிட்டீஸ்காரன் வியாபாரி என சொல்லிக் கொண்டுதான் இந்தியாவுக்குள் வந்தான்! நமது ராஜாக்களிடம் பணியாளராக எடுபிடியாக காவல்காரனாக அடியாளாக ஒட்டிக்கொண்டான்! சமயம் பார்த்து சதித்திட்டத்தையும் ஆயுத பிரயோகத்தையும் செய்து , இந்தியர்களை ஒன்று சேர விடாமல் பார்த்துக்கொண்டு, ஒவ்வொரு அரசர்களாக அனைவரையும் கொன்று குவித்தான் வெள்ளைக்காரன்!.

இந்தியர்களாகிய நாம் அப்போது ஓரணியில் நிற்காததால் வெள்ளைக்காரன் நம்மை ஆள்வதாக சொன்னான், ஆட்சியும் செய்தான்! கொடுங்கோல் ஆட்சி செய்தான்! நாம் ஒன்று சேராத வண்ணம் சதிச்செயல்களை செய்துக்கொண்டிருந்தான்!
அவனுடைய மதத்தையும் கலாச்சாரத்தையும் மொழியையும் இங்கு பரப்பினான், நம்மவர்களை அவர்களின் அடிமைகளைப்போல, எடுபிடிகளைப்போல ,மாற்றினான்!.

நேத்தாஜி போன்ற மாவீரர்களை காங்கிரஸ் என்னும் அவனின் பினாமி கட்சியை வைத்து சதிசெய்து கொன்று ஒழித்து, பினாமிகளிடமே நிர்வாகத்தை விட்டுவிட்டு சென்றான் வெள்ளைக்காரன்! இந்தியாவில் மட்டுமல்ல, இதே வேலையைத்தான் உலகின் பல நாடுகளிடமும் வெள்ளைக்காரன் செய்தான்!

வெள்ளைகாரனைப் போன்ற நரித்தந்திர வேலையில் இப்போது உலகத்தில் ஊடுருவ துவங்கியிருப்பது சைனாக்காரன்! வியாபாரம் என சொல்லி உள்ளே புகுந்துக்கொள்வது, வியாபாரத்தில் மோசடிகளை செய்வது, நாடுகளுக்கு வட்டிக்கடன்களை கொடுப்பது, நாடுகளால் வட்டியையும் கடனையும் கட்டமுடியாத நிலை வரும்போது பணத்திற்குப்பதிலாக உரிமைகளை வாங்குவது! இதுவெல்லாம் சைனாக்காரனின் நரிதந்திர வேலைகள்! பக்கத்து நாடுகளை மெல்ல மெல்ல அரிப்பதும் இவனது சதித்திட்டம்!

வியாபாரம் செய்யும் நாடுகளில் உள்நாட்டு வியாபாரத்தை மறணிக்க செய்வதும், தங்களை விட்டால் அந்த வியாபார நட்பு நாட்டுக்கு வேறு வழியே இல்லை, என்னும் நிலையை உருவாக்குவதும் சைனாக்காரனின் சதி திட்டம்!
சைனாவிடமும் பிரிட்டீஸ்காரனிடமும் வியாபார உறவுவைத்த நாடுகள் அழிந்துதான் போகும்! இதுதான் அவர்களின் சூட்சி திட்டம்!

இப்போது சைனாக்காரன், அமேரிக்கா, ரஸ்யா, ஜெர்மனி, ஜப்பாம், ஆஸ்திரேலியா, இலங்கை, மாலத்தீவு, ஈரான், ஈராக், பாகிஸ்தான், என அனைத்து உலக நாடுகளையும் அரித்துக் கொண்டிருக்கிறான்! இந்தியாவையும் அரிக்கத்துவங்கி விட்டான்!

சைனாவை சுற்றி 15 அண்டை நாடுகள் இருக்கின்றன! அந்த 15 நாடுகளிலும் எல்லை பிரச்சனைதான்! 1962 ல் 38000 சதுர கிலோமீட்டர் பரப்பான அச்சாச்சின் பகுதிய சைனாக்காரன் இந்தியாவிடமிருந்து அபகரித்தான்! 2010 முதல் 2013 வரை மூன்று வருடங்களில் மட்டும் 600 முறை ஊடுருவியிருக்கிறான் சைனாக்காரன்! 640 சதுர கிலோமீட்டர் பரப்பினை 2013 வரை ஊடுருவியுள்ளான் சைனாக்காரன்!
திபெத், தைவான், ஹாங்காங், இவை யாவுமே சைனாக்காரன் ஆக்கிரமித்த தனித்தனி தேசங்களே!

வியாபாரத்திலும் திருட்டு ஏமாற்று சுரண்டுவது, எல்லைகளிலும் சுரண்டி ஆக்கிரமிப்பது இது தான் சைனாக்காரனின் தேசியக்கொள்கை! 2014 மே 26 ல் இந்திய பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்றதுதான், சைனாவின் தலையில் விழுந்த இடியாக உள்ளது! உலகில் மோடிக்கு இணையான தலைவர் வேறொருவர் இல்லை!
சைனாவின் சுய ரூபத்தை மோடி உணர்ந்துக் கொண்டார்! காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சீனாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்னும் கொள்கையைத்தான் வைத்திருந்தார்கள்! ஆனல் நரேந்திரமோடியோ, சரி நிகராக எதிர்த்து நிர்க்கிறார்!

ஒரு அடி கட்டுப்பாட்டு பகுதியில் எடுத்து வைத்தால் ஒரு அடி தலையில் தந்து துரத்துவோம், என்னும் கொள்கையை மோடி கொண்டுள்ளார்! 2020 ஜூன் 15 அன்று கல்வான் பகுதியில் சற்று நகர்ந்ததற்கே, கடுமையான தாக்குதல் தந்து 40 திற்கும் மேற்பட்ட சீனர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்!

மட்டுமின்றி 1962 ல் சைனா ஆக்கிரமித்த நமது பகுதிக்குள் சென்று 40 க்கும் மேற்பட்ட மலை உச்சிகளில் நமது படைகளை நிலைகொள்ள செய்துள்ளோம்!
நீ ஒரு அடிவந்தால் நான் நான்கு அடி உன் இடத்தில் வருவேன் என்பதாக இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு உள்ளது!

சைனாவின் தலையில் அடித்து இப்படி உக்கார வைக்கும் இந்தியாவின் சாமர்த்தியத்தை பார்த்து உலமே வியப்பில் ஆழ்ந்துள்ளது! இந்தியாவின் இந்த நிலையை உலக நாடுகள் ஆதரிக்கவும் துவங்கியுள்ளன! அமேரிக்கா, ரஸ்யா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, என அனைத்து வல்லரசு நாடுகளும் இப்போது இந்தியாவின் சைன எதிர்ப்பு நிலையை ஆதரிக்கின்றன! இந்தியாவின் பின்னால் நாங்கள் நிற்கிறோம் என்று அனைத்து உலக நாடுகளுமே ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வரிசையில் நிற்கின்றன! இப்போது இந்தியா உலக தலைமை ஏற்றிருக்கிறது!

நன்றி குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...